உயிர்ப்பினை அடக்குதல் வேண்டும். நில்லாவுலகில் அவ் வுடல் நிலைக்கும் வழியதுவே. இடிஞ்சில்: விளக்கின் அகல் - ஆகுபெயராக உடம்பினைக் குறிக்கும். விளக்கெரி: விளக்குப்போலும் மூலத்தீ. கதுவல் - (உயிர்ப்பினை) அடக்குதல். நடந்திடும் பாரினில் - நில்லாவிலகினில். எண்ணலுமாம் - (அழியாமல்) இருப்பதும் கூடும். (அ. சி.) முடிந்தது - மறைந்து வைத்தது. இடிஞ்சில் - அகல்; ஈண்டுத் தேகம். இருக்க - அழியாது இருக்க. விளக்கெரி - மூலாக்கினி, கதுவல் - (கது - வெடிப்பு) வீணாத்தண்டின் கடைவாசலைத் திறத்தல.் நடந்திடும் பார் - அழியும் உலகம். நண்ணல் - நிலைபெறுதல். (10) 730. நண்ணு சிறுவிர னாணாக மூன்றுக்கும் பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடுஞ் சென்னியின் மூன்றுக்குஞ் சேரவே நின்றிடும் உன்னி யுணர்ந்திடும் ஓவியந் தானே. (ப. இ.) நெற்றிநடுவில் தோன்றும் மும்முடிச்சும், தலையின்கண் உள்ள திங்கள் ஞாயிறு தீ என்னும் மூன்றுக்கும் தொடர்பாகும். இவற்றை ஓவியம் போன்று உள்ளத்துக் கருதுதல் அருள்நினைவாகும். விரல் - விரலம் என்பதன் திரிபு; நெற்றி. ஓவியம்: சித்திரம். அஃது உவமையாகு பெயராய் உன்மனையைக் குறிக்கும். உன்மனை: உன்மனை என்னும் திருவருளாற்றல். (அ. சி.) சிறு...மூன்று முக்கட்டு - பிரம, விண்டு, உருத்திரக் கட்டுகள் அல்லது கிரந்திகள் அல்லது சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம். சென்னியின் மூன்று - சந்திரன், சூரியன், அக்கினி. உள்ளி....ஓவியம் - உன்மனை. (11) 731. ஓவிய மான வுணர்வை அறிமின்கள் பாவிக ளித்தின் பயனறி வாரில்லை தீவினை யாமுடன் மண்டல மூன்றுக்கும் பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே. (ப. இ.) உயிர்ப்படங்கி அசைவற்றிருக்கும் உணர்வை அறிமின்கள். மீண்டும் பிறப்பதற்கு வாயிலாக இறக்கும் உடம்பினைப்பெற்ற கொடியோர் இவ் வுண்மையினை உணரார். ஞாயிறு திங்கள் தீ என்னும் மண்டிலம் மூன்றும் பரவெளி மண்டிலத்தோடியையுடையன. பரவெளி மண்டிலம் - ஆயிரம் இதழ்த்தாமரை. இம் மூன்றினையும் தாங்கி நிற்பது நடுநாடி. நடுநாடி: சுழுமுனை. (அ. சி.) பூவில்....தண்டே - சகசிர அறையிலிருந்து வெளிப்பட்டுள்ள வீணாத்தண்டு. (12) 732. தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு மண்டல மூன்று மகிழ்ந்துடல் ஒத்திடுங் கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன் பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே.1
1. கரும்பாட்டிக். நாலடியார் 35.
|