629
 

(ப. இ.) உண்மை நாட்டமின்றிப் பொருள் கருதி நூல்களைப் படித்துப் பிதற்றித் திரியும் பொய்ப் பெருமைகளை விட்டகன்று நீங்கள் மாத்திரையாகிய ஒரு நொடிப்பொழுதேனும் உயிர் உணர்வு வெளிமுகப்படாது. அகமுகப்பட்டுச் சிவனை அவனருளால் நோக்குங்கள். அங்ஙனம் நோக்கினால், அப் பார்வையுணர்வு பசுமரத்தாணிபோல் உயிரின்கண் பதிந்து விளங்கும். அவ் விளக்கத்தால் தொன்றுதொட்டுப் பிணித்துவரும் பிறவி நீங்கியோடும்.

(அ. சி.) சதுர் - பெருமை. மாத்திரைப்போது - இமைகொட்டும் நேரம். மறித்து - வெளிமுகமாய் இருக்கும் அறிவைத் தடுத்து. ஆர்த்த - பந்தித்த.

(7)

1605. தவம்வேண்டு ஞானந் தலைபட வேண்டில்
தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில்
தவம்வேண்டா மச்ச கசமார்க்கத் தோர்க்குத்
தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே.1

(ப. இ.) ஒருவர்க்குத் திருவடியுணர்வு வேண்டப்படுமானால் அதற்குச் சீலம் நோன்புகளாகிய புறத்தவப் பயிற்சிகள் இடையறாது வேண்டப்படும். ஞான சமாதியாகிய திருவடியுணர்வில் நிலைத்து நிற்போருக்கு முற்ற முடிந்த மேல்வகுப்புக்குச் செல்வார் நிலைபோன்று வேறு தவங்கள் வேண்டப்படுவன அல்ல. அதுபோலவே செறிவு அறிவு ஆகிய இருநிலையின நிற்பார் முறையே அகத்தவமும் அறிவுத்தவமும் உடையராவர். அவர்கட்கும் ஏனைத்தவங்கள் வேண்டா. பிறர் இப்பொருள் மொழியுண்மையினை யறியார்.

(அ. சி.) சகசன்மார்க்கத்தோர்க்கு - சகமார்க்கத்தோர்; சன்மார்க்கத்தோர்; அஃதாவது யோகஞான நெறியில் நிற்பவர். மாற்றம் - தடுமாற்றம்.

(8)


6. தவநிந்தை
(தவக்கடப்பு)

1606. ஓதலும் வேண்டாம்2 உயிர்க்குயி ருள்ளுற்றாற்
காதலும் வேண்டாமெய்க் காய மிடங்கண்டாற்
சாதலும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற்
போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே.


1. பசித்துண்டு. சிவஞானபோதம், 8. 1 - 2.

" நாடுகளிற், சிவஞானசித்தியார், 10. 2 - 3.

" தருமந். அப்பர், 5. 97 - 21.

2. உற்றாரை. 8. திருப்புலம்பல், 3.

" கண்கள். " திருப்படையாட்சி, 1.

" செம்மை. 12. சண்டேசர், 2.