1146
 

கொண்டு மேல் வினவுவோமானால் இவை இரண்டுங்கடந்த அப்பால் நிலையில் ஓரின்பமுண்டு. அது மீதொழிவின்பம் என்று சொல்லப்படும். இவற்றை இனப்படுத்துக் கூறுங்கால் மனங்கலந்த நனவிடத்துங் கனவிடத்துங் காணும் இன்பம் ஒன்று, மனங்கடந்த அறிவுகலந்த அப்பாலை இன்பம் ஒன்று ஆக இரண்டென்ப.

(அ. சி.) மன ஒற்றுமையால் பொருள்களை நனவில் கண்டு ஆனந்தித்தல் ஒன்று, அதே பொருள்களைக் கனவில் கண்டு ஆனந்தித்தல் ஒன்று ஆக ஆனந்தங்கள் இரண்டென்ப என்று இம் மந்திரம் கூறுகின்றது.

(1)

2769. கரியட்ட கையன் கபாலம்கை ஏந்தி
எரியும் இளம்பிறை சூடும்எம் மானை
அரியன் பெரியனென் றாட்பட்ட தல்லால்
கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி 1லேனே.

(ப. இ.) ஆருயிர்களின் ஆணவமுனைப்பாம் மதம்பொழியானையை அடக்கியவன் சிவபெருமான். அது யானைத்தோலை உரித்துப் போர்த்தவன் என்னும் குறிப்புமொழியால் வழங்குகின்றனர். உலக இயல்பில் ஒருவனையடக்கி நல்வழிப்படுத்தக் கூறுங் குறிப்பில் உன்தோலை உரித்துவிடுவேன் என்று வழங்கிவருகின்றனர். இதனால் அவ்வுண்மை அறியலாம். கல்விச் செருக்குடைய நான்முகனின் செருக்கடங்கத் தலைமை கிள்ளப்பட்டதென்க. அக்குறிப்பு அவன் தலை கிள்ளப்பட்டு, அம் மண்டையோடுங் கையில் கொண்டுள்ளவன் சிவன் என்பதனால் உணரலாம். ஒளிவிடும் அறிவுடைய ஆருயிர்களே இளம்பிறை என வழங்கப்பட்டன. அவற்றின் அறிவு சிவபெருமானின் அறிவுத்துணை கூடினாலன்றி விளங்கா. அம்முறையான் தலையில் இளம்பிறைசூடினன் என்றருளினர். அவன் எம்தலைவனாகிய எம்மானாவன். அவனே எல்லாவுயிர்க்கும் தலைவனாவன். அவன் மாற்றம் மனங்கழியநின்ற மறையோன். மறையோன் - சிவசத்து. அவனைத் தோன்றாத் துணையாகநிற்கும் தன்மையால் அரியனெனவும், பேரின்பப் பெருவாழ்வு தந்தருளுந்தன்மையால் பெரியனெனவும் உளங்கொண்டு ஆட்பட்டோம். அதுவல்லாமல் அவனைக் கருமை நிறம் வாய்ந்தவன், அல்லது செம்மைநிறம் வாய்ந்தவன் என எவராலுங் காணவொண்ணாது; யாமும் கண்டிலம். நிறமும் வடிவமும் இறைவன்தன் பொதுத் தன்மையாகும். அவை கடந்தநிலையே அவனுடைய சிறப்புத் தன்மையாகும். சிறப்புத் தன்மை சொல்லொண்ணாதது, என்றும் பொன்றாது ஒன்று போலிருப்பது; திரிபில்லது. பொதுத்தன்மை அருளால் ஆருயிர்கள் உய்தற்பொருட்டுக் கொண்டுள்ள ஐயைந்து திருவுருவங்களும் பிறவுமாகும். இவ் வுண்மை அப்பரருளிய "ஐயஞ்சின் அப்புறத்தான்" எனவும் அருமறை யானுணரலாம்."

(அ. சி.) கரிஅட்ட - யானையை உரித்த. கரியன் கொல் சேயன் கொல் - கருப்போ சிவப்போ.

(2)


1. மைப்படிந்த. அப்பர், 6. 97 - 10.

" இன்னவுரு. சம்பந்தர், 3. 71 - 4.

" அன்றுந். 11. காரைக்காலம்மையார், அற்புதத், 61.

" கேள்விவாய்க். சீவகன், 2787.

2. பையஞ். அப்பர், 4. 4 - 10.