1215
 

2900. உருவிலி யூனிலி யூனமொன் றில்லி
திருவிலி தீதிலி தேவர்க்குந் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்தென் மனம்புகுந் 1தானே.

(ப. இ.) விழுமிய முழுமுதற் சிவபெருமான் மலம் வினைகளுக்கு ஈடாக வரும் உருவினையுடையவன் அல்லன். பிறப்பில்லாதவன். இயல்பாகவே மலமில்லாதவன். சென்றடையுந் திருவில்லாதவன். குற்ற மற்றவன். தேவர்கட்கும் தேவனாயுள்ளவன். ஒப்பில்லாதவன். பூதப் படைகளை யுடைமையாகக் கொண்டாள்பவன். தான் எல்லாப் பொருட்கும் சார்பாக இருப்பதல்லாமல் தான் ஒன்றையும் சார்ந்திருக்குந் தன்மையனல்லாதவன். இத் தன்மையாவன ஒன்பது ஒப்பில்பண்புகள் வாய்ந்த அவன் வலியவந்து அடியேன் உள்ளம் புகுந்தருளினன். திருவிலி: திரு + வில்லி = அழகிய பொன்மலையை வில்லாக வுடையவன் என்றலும் ஒன்று. மருவிலி என்பதற்குத் தொடக்குண்ணாதவன் என்றலும் ஒன்று. பூதம் என்பது ஆருயிர்களையே. இத் திருப்பாட்டு ஒருபுடையொப்பாக 'சிவஞ்சத்தி' என்னும் திருப்பாட்டின் பொருளின் கருவாகத் திகழும். 'வில்லி', 'விலி' என இடை குறைந்ததெனக் கொள்க.

(அ. சி.) ஊனிலி - மாயை இல்லாதவன். திருவிலி - திரு + வில்லி மேருவில்லி. மரு - குற்றம்.

(5)

2901. கண்டறி வாரில்லைக் காயத்தின் நந்தியை
எண்டிசை யோரும் இறைவனென் றேத்துவர்
அண்டங் கடந்த அளவிலா ஆனந்தத்
தொண்டர் முகந்த துறையறி 2யோமன்றே.

(ப. இ.) சிவபெருமான் ஆருயிர்களின் தவமார் உள்ளத்திடைப் பள்ளஞ்சேர் வெள்ளமென நீங்காது நின்றருள்வன். ஏனைப் புறத்துக் காணப்படும் திருக்கோவில் முதலியனவெல்லாம் உள்ளத்துள்ள நீங்கா இறைவனை நினைப்பூட்டும் வழியடையாளங்களாகும். இவ் வுண்மையினையுணர்ந்து உள்ளம் பெருங்கோவிலாக்கொண்டு நந்தி எழுந்தருளியுள்ள மெய்ம்மையினைத் திருவருள் நினைவால் கண்டறிவாரில்லை. எட்டுத் திசையினுமுள்ள மட்டிலன்பர் அனைவர்களும் சிவபெருமானையே முழுமுதல் இறைவனென்று தொழுது வணங்குகின்றனர். அண்டங்கள் அனைத்தையும் கடந்த அளவிடப்படாத பேரின்பத் திருத்தொண்டர்கள் தம் உணர்வுறு நுகர்வாய் உண்ணும் திருவடிப் பேரின்பத் துறையினை முறையுற அறவேயுணர நாம் அறியோம். அறவே - முற்றாக.

(அ. சி.) காயத்தின் - உடம்பினுள். முகந்த - அனுபவித்த.

(6)


1. சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார், 2. 4 - 2.

" சிவனரு. " 1. 3 - 11.

" மண்ணல்லை. அப்பர், 6. 45 - 9.

" சீர்த்தானைச். " " 54 - 2.

" மருந்தானை. " 6. 63 - 2.

2. மிண்டு. 9. திருப்பல்லாண்டு, 2.