களைக் கண்ணி அறிதல் கணக்கெனப்படும் திருவைந்தெழுத்தை எண்ணிக் கணித்து உருவேற்றலும் கணக்கெனப்படும். ஒன்றாதலாம் தொகை வேறாதலாம் வகை, நின்றவுடனாதல் விரிநேர் என்பதனை நினைவுகூர்க. இம்முறைசேர் கணக்கினை அருளால் அறிந்தவர் சிவபெருமான் திருவடியினைக் காண்பர். இக் கணக்கினை அறியார் அவ்வடியினைக் காணார். இஃது ஒருபுடைச் சிவவுருவமாகும். அதுபோல் கணக்கறிந்தார்க்கே சிவனுண்மைக்காட்சி புலனாம். சிவனுண்மைக் காட்சியென்பது திருவடிப் பேரின்பத் திளைப்பேயாம். இக் கணக்கினையறிந்து சிவமெய்ப்பொருளை எய்ப்பில் வைப்பென அறிதலால் அண்டுதலாகிய செறிவுநிலை ஏற்படும். இதுவே சிவயோகம். சிவயோகம் என்பது தன் இழப்பாகும். இக் கணக்கினை அறிந்தாரே திருவடிப் பேரின்பம் இம்மையே துய்ப்பவராவர். அவர் செயல் அனைத்துஞ் சிவச் செயலேயாகும். இதுவே சிவபோகம். சிவபோகம் என்பது அருளுழப்பேயாம். இதன் விரிவை உண்மைநெறி விளக்கத்து உமாபதி சிவநாயனார் ஓதியருளியவாற்றானுணர்க. இத்தகைய கணக்கினைக் கற்றறிந்தாரையே செந்நெறிச் செல்வர் - செம்பொருட்டுணிவினர் கற்றறிந்தார் எனக் கருதுவர். காட்சி - திருவடியுணர்வு; சிவ ஞானம். அண்ட - சேர. (அ. சி.) கணக்கறிந்தார் - அஞ்செழுத்தைக் கணிக்கும் வகை அறிந்தார். (7) 804. கல்லாத மூடரைக் காணவும் ஆகாது.1 கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்2 கல்லாத மூடர் கருத்தறி யாரே. (ப. இ.) சிவனறி கல்வியினைக் கல்லாதார் மூடர் எனப்படுவர். அவரே உண்மை அறிவிலாதவரும் ஆவர். அவ்வறிவிலாதவரை நல்லார் காணவும் அஞ்சுவர். அதனால் அம் மூடரைக் காணவொண்ணாது என்றனர். மூடர் : அறியாமையால் மூடப் பட்டவர். அவர்தம் ஒழுக்கமிலாத இழுக்குவாயால் வரும் வழுக்குமொழிகளைச் செவி கொடுத்துக் கேட்பது முறைமையாகாது. கடன் - முறைமை. கல்லாத மூடர்க்குத் திருமுறைக் கல்வி இல்லாதவரே நல்லாராவர். கல்லாதமூடர் ஆகுங் கருத்தினையும் அறியார்; ஆன்றோர் கருத்தினையும் அறியார். (8) 305. கற்றுஞ் சிவஞானம் இல்லாக் கலதிகள்3 சுற்றமும் வீடார் துரிசறார் மூடர்கள் மற்றும் பலதிசை காணார் மதியிலோர் கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே. (ப. இ.) அளவில்லாத உலக நூற்களைக் கற்றும் அறிவுநூலாகிய சிவஞானம் கல்லாதவர் கலதிகளாகிய வீணர்களாவர். 'மறப்பித்துத் தம்மை மலங்களில் வீழ்க்கும், சிறப்பிலாதா'ராகிய தீய சுற்றத்தைவிட்டு நீங்கார். அதனால் மும்மலத் துரிசுமறார். இத்தகையார் மூடர்கள் எனப்
1. தறிசெறி. 8. அச்சப்பத்து, 8. 2. சிற்றினம் - திருக்குறள், 451. 3. கலரா - 8. திருக்கோவையார், 259.
|