(ப. இ.) பொறி புலன் கலன் முதலிய உறுப்புகள் விரிந்த இடத்து நனவினைப் பொருந்தும். மாயை விளக்குப் போன்று இருந்த இடத்தில் வலிமையோடு நிற்கும். நனவில் அப்பால்நிலைக்கு முன்நிலை வாய்க்குமிடத்து அருளால் ஆருயிர் தாமரையிலை நீர்போல் ஒட்டாது நிற்கும். இக் கருவிகளெல்லாம் நனவின்கண் ஏற்படும் பேருறக்கநிலையில் விட்டகலாது ஒட்டிச் செயலற்றிருக்கும். (அ. சி.) ஈடான - வலிமையுள்ள. தெரிந்ததுரியம் - நனவிற்றுரியம். (10) 2240. உன்னை யறியா துடலைமுன் நானென்றாய் உன்னை யறிந்து துரியத் துறநின்றாய் தன்னை யறிந்தும் பிறவி தணவாதால் அன்ன வியாத்தன் அமலனென் 1றறிதியே. (ப. இ.) முன்நாளெல்லாம் உன்னுடைய இயற்கை உண்மைத் தன்மையை அறியாது 'ஐம்புலவேடர் சுழலிற்பட்டு' உடலையே நானென்று கூறினாய். அருளால் உன்னையறிந்து பேருறக்கமாகிய துரியத்தைப் பொருந்தி நின்றாய். தன்னுடைய நிலைமையினை அறிந்த அளவானே பிறவி நீங்காது. பிறவி நீங்குவது அப்பால் நிலையில் விளங்கும் மன்றன் என்று ஓதியருளப்பெற்ற எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இயல்பாகவே பாசங்களின் நீங்கிய சிவபெருமானால் ஆம் என்று அறிவாயாக. இஃது, உடல்பெருக்கும் நோயை நோயென்றுணராது அழகென்றுணர்ந்து சிலநாள் மகிழ்ந்து பின் துன்புறுநிலையில் நோயென்று உணர்கின்றனன். அதுநீங்க வேண்டுமென்றும் நாடுகின்றனன். ஆனால் அஃது அவனால் நீங்குவதன்று. அதனை நீக்கும் அன்பறிவு ஆற்றல் களமைந்த அரும்பெரும் மருத்துவனால் மட்டுமே முடியும்; அதுபோன்றதாகும். வியாத்தம் - நிறைவு; பரப்பு. (அ. சி.) தணவாது - நீங்காது. வியாத்தன் - எங்கும் கலந்திருப்பவன். (11) 2241. கருவரம் பாகிய காயந் துரியம் இருவருங் கண்டீர் பிறப்பிறப் புற்றார் குருவரம் பெற்றவர் கூடிய பின்னை இருவரு மின்றியொன் றாகிநின் 2றாரே. (ப. இ.) கருவுற்ற நாள் முதலாக வளர்ந்து ஓர் எல்லையை எய்தும் நிலை பிறப்பாகும். அப் பிறப்பினால் ஏற்படுவது இவ்வுடல். படைத்தலையும் காத்தலையும் திருவாணையால் புரிந்துவரும் அயனும் அரியும் பிறப்பு இறப்பு உற்றவர்களே. சிவகுரு எழுந்தருளிவந்து திருவைந்தெழுத்தாகிய வரம் அருள்வன். அவ்வரத்தினைப்பெற்று அவர் திருவடி
1. ஐம்புல. சிவஞானபோதம், 8. 2. அவனே. " 10. " நானேயோ. 8. திருவேசறவு, 10. " இரவனா. அப்பர், 6. 15 - 4.
|