1187
 

படும்அருயொளியாம் பூந்தூளால் விலக்குதல்வேண்டும். சார்ந்ததன் வண்ணமாக இருக்கும் தன்மை வெண்ணிறத்திற்கே உண்டு. அதனால் ஆருயிரை வெள்ளெலி என உருவகித்தனர். நிலைபெற்று நிற்கின்ற வெள்ளெலியாகி உயிர் அமைதி, ஆட்சி, அழுந்தல் என்னும் முக்குணங்களையும் உடன்கொண்டு வந்தது. உலையாகிய உடம்புக்குப் புறமாக அவ்வுயிர் செல்லுமானால் அக்குணங்கள் மூன்றும் கெடும். புறம்பாகச் செல்லுதல் என்பது உயிரின் உள்ளம் சிவத்தின் பேரிலேயே பதிந்து கிடத்தல். அவ்வுயிர் உடம்பின்கண் பற்றுக்கொண்டிருக்குமானால் அம் முக்குணங்களும் முனைத்து நிற்கும். புலையாகிய மாயைக்குப் பிறந்த அக் குணங்கள் அகலும்வழி இவையாகும். பிறத்தல் என்பது மாயையின் காரியமாகத் தோன்றுதல்.

(அ. சி.) குலை.....உழக்கின் - எழுகின்ற கெட்ட எண்ணங்களை அடக்கினால். வெள்ளெலி - சார்ந்ததன்வண்ணம் ஆகும் சீவன். உலை - உடம்பு. ஓடும் - முக்குணங்கள் கெடும். இருக்கும் - உள்ளாயின நிலை பெறும். புலைக்கு - மாயைக்கு.

(27)

2853. காடுபுக் காரினிக் காணார்கடுவெளி
கூடுபுக் கானவை ஐந்து குதிரையும்
மூடுபுக் கானவை ஆறுள ஒட்டகம்
மூடுபு காவிடின் மூவணை யாகுமே.

(ப. இ.) மாயையின் பேரொடுக்கப் பெரு வெளி சிவமாகும். அதனைக் காடென ஓதினர். அக் காட்டின்கண் அருளாற் சேர்ந்து நிலைபெற்றன ஆருயிர்கள். கடுவெளியாகிய பாழினைச் சிறிதும் காணார். கூடாகிய உடம்பின்கண் ஐந்து குதிரையாகிய அறிதற் கருவிகள் புகுந்தன. செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணாவுவகை என்னும் ஆறும் பெரும்பகையாகும். இவற்றை ஒட்டகம் என உருவகித்தோதினர். ஆருயிர்கள் அருட்டுணையால் இவ் வொட்டகங்களை அடக்கி மேற்செல்லுதல் வேண்டும். அங்ஙனம் சென்றால் அவ்வுயிர்கள் மூவணை எய்தும். மூவணையாவது ஆருயிர்ச் செயலறல், அருட் செயலறல், அருளோன் செயலறல் என்ப. இவற்றைச் சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் எனவும் கூறுப. ஒட்டகம் பாலைநிலக் கருப்பொருள்.

(அ. சி.) காடு - மாயையாகிய காடு. கடுவெளி - சூனியம். கூடு - உடல் ஐந்து. குதிரை - ஞானேந்திரியம் ஐந்து. மூடு புக்கானது அடங்கி ஒழிந்தது. ஆறுள ஒட்டகம் - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம். மூடுபு - அடக்கி. தாவிடின் ஒழுகினால். மூவிணை - சீவதுரியம், சிவதுரியம், பரதுரியம்.

(28)

2854. கூறையுஞ் சோறுங் குழாயகத் தெண்ணெயுங்
காறையும் நாணும் வளையலுங் கண்டவர்
பாறையி லுற்ற பறக்கின்ற சீலைபோல்
ஆறைக் குழியில் அழுந்துகின் 1றாரன்றே.


1. தம்கையே. ஆரூரர், 7.