1213
 

கால இடையீடு கூறுவார் எவருமிலர். புறத்துக் காணப்படும் (2715) ஐவகை மன்றங்களினும் மிக்கதாய் அகத்துக் காணப்படும் நெஞ்சக மன்றத்து உயிர்க்கு உயிராய் நுண்பொருளாய் நிற்கும் மறைபொருள் ஒன்றுண்டு. அப்பொருளே சிவபெருமான். நெஞ்சக மன்றத்தின்கண் நிகழ்த்தும் நடிப்பே முதற்கண் நடித்த நடிப்பகும். மறவா வுணர்வாற் சென்று அச் சிவபெருமான் திருவடிக்கீழ் உறைபவர் அவனுடன் பின்னிப் புணர்ந்து மன்னி யின்புறும் அணைந்தோராவர். அணைந்தவர் திருவடியினைச் சேரும் ஆறு இதுவாம். ஆறு: வாயில்; வழி.

(அ. சி.) என இல்லை - என இல்லாமல். சென்றார் - சமாதியை அடையப் பயிற்சி செய்பவர். அங்கே - மோன சமாதியில். மறைப் பொருள் - பரமசிவம். ஆங்கணைந்தவர் - சமாதி கூடியவர்.

(1)

2897. காட்டுங் குறியுங் கடந்தவர் காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன்
கூட்டுங் குருநந்தி கூட்டிடி னல்லது
ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் 1தற்றே.

(ப. இ.) ஆருயிர்களின் செவ்வி பார்த்துத் திருவருளே திருமேனியாகக்கொண்டு வெளிப்பட்டு வந்தருளும் சிவபெருமான் சிவகுருவாவன். அவனும் ஒருபுடையொப்பாகக் காட்டுவதன்றி நுகர்வினை முற்றவுணர்த்தலாகாமையின் காட்டுங் குறியும் கடந்தவன் சிவபெருமான் என்றருளினர். அவனே அடையும் காரணமாகிய பயிற்சிகளைக் கூறியுணர்த்தியவாறே இடையறாது பயிலுதல் வேண்டும். அங்ஙனமன்றி ஏட்டின் புறத்து எழுதிவைத்துக் கொண்டமையால் விளையும் பயன் யாது? திருவடியிணைக்கீழ் கூட்டுவித்தருளும் குருநந்தி கூட்டினால் அல்லாமல் வேறு நன்னெறிக்கு உய்க்கும் வாயில் இல்லை. மற்றுள்ள நூற்பயிற்சி முதலன அத்தனையும் ஆட்டின் கழுத்தில் பயனின்றித் தொங்கும் மடியோ டொக்கும். அதர்போன்று பயனிலவாம் என்க. வாயில் - வழி. மடி - முலை.

(அ. சி.) காட் . . . . பயன் - அடையாளத்துக் கொண்டு அப்பாற்பட்ட சிவத்தை அடையும் நெறியை ஏட்டில் எழுதிவைத்துக் கொண்டால் மாத்திரம் பயன் இல்லை. கூட்டும் . . . . . ல்லது - குரு உபதேசித்த நெறியில் நின்றால் அல்லது. ஆட்டி . . . . . தற்றே - வெள்ளாட்டின் கழுத்தில் தொங்கும் பயனற்ற அதர்போல முடியும்.

(2)

2898. மறப்பது வாய்நின்ற மாயநன் நாடன்
பிறப்பினை நீங்கிய பேரரு ளாளன்
சிறப்புடை யான்திரு மங்கையுந் தானும்
உறக்கமில் போகத் துறங்கிடுந் 2தானே.

(ப. இ.) ஆருயிர்கள் அறியாமை வயப்பட்டுப் புலம்பு எய்தின. புலம்பு - கேவலம். பின்னர் அருளால் அவ் வறியாமையைத் தேய்த்து


1. காவலனை. பழமொழி நானூறு, 274.

" சாத்திரத்தை. திருக்களிற்றுப்படியார், 4.

" ஆற்றல். திருவள்ளுவமாலை, 15.

2. பிறப்பென்னும். திருக்குறள், 358.