172
 

376. உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத் தமரர் தலைவனும் ஆதியுங்
கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்
பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே.1

(ப. இ.) ஏழுலகினையும் ஒருகாலத்து உண்டு உமிழ்ந்தவன் மாயன். அதனால் உலகோர் அவனை மண்ணுண்ட மாயன் என்பர். கண்ணுக்கும் கருத்துக்கும் முறையே தோன்றும் பருவுடல் நுண்ணுடலாகிய உடல் மெய் இருபத்து நான்கினையும் காப்பவன் மாயன். அதனால் அவன் மண்ணுண்ட மாயன் எனப்படுவன். அத்தகைய அரியும், அவனுடனாகி அவனுக்கு மேற்பட்டு நிற்கும் அண்டத்தமரர் தலைவனாகிய அரனும், திருவாணையால் ஆதியாகிய படைத்தல் தொழிலைச் செய்யும் இயற்றுதற் காரணனாகிய அயனும் பல பொருள்களுடன் ஐந்தொழிற்கும் காரணனாகிய முழுமுதற் கடவுளாம் சிவபெருமானால் முன்னே படைக்கப்பட்டவராவர். இச் சிவன் நாலாம் நிலைக்கண் உள்ள சிவன் என்ப நாலாம் நிலை - துரியநிலை. ஆதி - காரணம்.

(9)

377. ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்2
பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
வீங்குங் கமல மலர்மிசை மேலயன்3
ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே.

(ப. இ.) உயர்ந்த பெரிய கடல் மேல் தங்கியிருக்கும் அரியுடனும், பெரிய செந்தாமரை மலர் மேலுறையும் அயனுடனும் முறையே காத்தல் படைத்தல்களாகிய தொழிலினை அவர்கள் வாயிலாக இயற்றவுன்னினன் சிவன். சிறந்த திருக்கயிலையின்கண் எழுந்தருளியுள்ள 'யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையா'னாகிய அவன் அவர்கள்பால் திருவாணையினை வைத்தருளத் திருவுள்ளங் கொண்டருளினன். உயிர் - திருவாணை. உணர்ந்தான் திருவுள்ளங்கொண்டான்.

(10)

378. காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்4
பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரண மாய்உல காயமர்ந் தானே.5

(ப. இ.) அனைத்துயிர்க்கும் அனைத்துடற்கும் அனைத்துலகிற்கும் வினைமுதற் காரணனாயுள்ளவன் சிவபெருமான். அன்பாகிய திருவருளுடன் கலந்து எங்கும் நீக்கமற நின்றவன் சிவன். நாரணனாகிய திருமாலின் நடுவுடல் என்று சொல்லப்படும் நெஞ்சிடங்கொண்டவனும்


1. தாங்கரும். சம்பந்தர்,3. 119 - 4.

2. பேயாயின. "1. 15 - 3.

3. எண்ணார்தரு "1. 13 - 5.

4. பாரர்ழி. சம்பந்தர்,3. 54 - 9.

5. அவையே. சிவஞான போதம், 2.