281
 

622. குரவன் அருளிற் குறிவழி மூலன்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.

(ப. இ.) சிவகுருவானவர் செவியறிவுறுத்திய வழியே, மூலத்திடத்து இயங்கும் திருவருளாற்றல் துணைகொண்டு உயிர்ப்பு நடுநாடியிற் செல்லும் துன்பினையுணர்க. அதனைத் தெரியவுணர்த்தும் சாம்பவி, கேசரி, முத்திரை மேற்கொண்டு சிவநிலையும், எண்சித்தியும் ஒருங்கெய்துவ துண்மை குரவன் - ஆசான். குறிவழி - குரவன் அறிவுறுத்தியநெறி. மூலப்பரையின் - மூலத்திடத்தியக்கும் திருவருளாற்றலால். சங்கட்டம் பார்த்து - (உயிர்மூச்சு நடுநாடியிற் செல்லும்) வருத்தத்தையறிந்து. சாம்பவிகேசரி சேர - சாம்பவி கையடையாளப் பயிற்சியுடன் கேசரிக் கையடையாளப் பயிற்சி பொருந்த (கையடையாளம் - முத்திரை). சாம்பவி - சம்புவின் தொடர்பு எய்துதற்குரிய கையடையாளம். இது நெஞ்சச் சக்கரத்திலிருக்கும் சிவத்தினிடம் எண்ணத்தையும் உயிர் மூச்சையும் ஒடுக்கி அடங்கியிருக்கச்செய்யும் மாண்புடையது. நெஞ்சச் சக்கரம் - அநாகதம். கேசரி - வெளியெலாம் அடங்கியிருக்கும் புருவ நடுவில் எண்ணத்தையும் உயிர்மூச்சையும் ஒடுங்கியிருக்கச்செய்யும் வன்மையுடையது. புருவநடு - ஆக்கினை.

(அ. சி.) சாம்பவி, கேசரி - இருவகைத் தீக்கைகள்; முத்திரைகள் என்றுங் கூறுப.

(3)

623. காயாதி பூதங் கலைகால மாயையில்1
ஆயா தகல அறிவொன் றனாதியே
ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலு மாமே.

(ப. இ.) காயமுதலாகச் சொல்லப்படும் பூதம் கலை காலம் மாயை முதலியவற்றின்கண் நுணுகிப் பற்றுக்கொள்ளாது அகலச் சிவபெருமானிடத்து அறிவொன்றும், தொன்மை முதலாக என்றும் ஒரு படித்தாகிய சிவபெருமான் திருவடியைக் கூடினால் திருவருள் வெளியிற்சேர்தல் எளிது. அறிவு ஒன்று - (ஒன்று அறிவு) ஒருபடித்தாய அறிவு. பரகாயம் - திருவருள் உடல். மேவல் - பொருந்தல்.

(அ. சி.) காயாதி - காயம் ஆதி. அறிவொன்று - ஒருமுகப்பட்ட சித்தம். ஓயா - முடிவு இல்லாத. வீயா - இறவாத.

(4)

624. இருபதி னாயிரத் தெண்ணூறு பேதம்
மருவிய கன்ம மாமந்த யோகந்
தருமிவை காய உழைப்பாகுந் தானே
அருமிரு நான்காய் அடங்குமா சித்திக்கே.

(ப. இ.) வேண்டி வினைதழுவல் கன்மயோகம் எனப்படும். அஃது இருபதினாயிரத்தெண்ணூறு வேறுபாடுகளைக் கொண்டது. இவ்


1. கலையாதி. சிவஞானபோதம், 3. 7 - 1.