298
 

(ப. இ.) திருவருள் துணை மேலிட்டபருவத்தில் மெய்ப்பொருளாகிய சிவபெருமானை அவன் அருட்கண்ணால் கண்டவிடத்து. பொன்மை..போயிட - உடம்பு முழுவதும் பொன்வண்ணமாகத் திருவடிப் பேறாகிய நன்மை மேலிட நற்கொடிபோலும் அருள் வீழ்ச்சியுண்டாகும். நன்மை - திருவடிப்பேறு. நற்கொடி - திருவருள்.

(அ. சி.) தழைத்த பகல் - சிறப்புற்ற அந்நாள்.

(50)

670. நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி யாகம் அறிந்திடில் ஓராண்டு
பொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங்
கற்கொடி யாகிய காமுக னாமே.

(ப. இ.) திருவருளாற்றலை ஓராண்டுப்பயிற்சியில் தன்னுள்ளத்தே இடையறா நினைப்பாம் தியானத்தால் பெற்றவர், பொற்கொடி ....னாமே - அத் திருவருளால் இயக்கப்பெறும் இருநூற்று இருபத்து நான்கெனும் உலகங்களெல்லாம் எளிதாகப் போய்வருவர். அப்படிப் போய்வந்தாலும் அம் மாயைக்கண் தொடக்குறார். கற்கொடி - கல்லின்கொடிபோன்ற உரனுடைய உள்ளம். காமுகன் - அவ் வுரனுடை யுள்ளத்தை அருளால் விரும்புபவன்.

(51)

671. காமரு தத்துவ மானது வந்தபின்
பூமரு கந்தம் புவனம தாயிடும்
மாமரு 1வுன்னிடை மெய்த்திடு மானனாய்2
நாமரு வும்ஒளி நாயக மானதே.

(ப. இ.) அழகிய உண்மைப் பொருளானது கைகூடியபின், மாமரு.....மெய்த்திடும் - நினைத்த இடம் செல்லத்தக்க பேரருள் ஆற்றல் தானே வந்து பொருந்தும். மானனாய்....மானதே - திருவருளால் சிவமாம் பெருவாழ்வு பெற்றோய் நாம் அடைதற்குரிய உணர்வொளிப் பெரும் பிழம்பு அச் சிவபெருமானேயாம். மான் - பெரியோன். மா - பெருமை.

(52)

672. நாயக மாகிய நல்லொளி கண்டபின்
தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்
போயக மான புவனங்கள் கண்டபின்
பேயக மாகிய பேரொளி காணுமே.3

(ப. இ.) நமக்கு என்றும் மாறாத்தலைவனாம். சிவபெருமான் திருவருள் உணர்ந்தபின், தாயக...திடும் - இவ் வுயிர்கள் அவ் வருள்வெளியாம் திருச்சிற்றம்பலமே நிலைத்த உறைவிடமாகக் கொண்டு வாழும.் போயக....கண்டபின் - சென்று விரிந்துகிடக்கும் உலகங்களைக் கண்ட பின், பேயக....காணுமே - தன்வழிச் செலுத்தும் பேய்போன்ற திருவரு


(பாடம்) 1. வுன்னிடை. மெய்திடு.

2. தன்னை. சிவஞானபோதம், 12 : 4 - 3.

3. ஞாலமதின். சிவஞானசித்தியார், 8 : 2 - 22.