97
 

னெறிச் சென்று நலம் பெற வேண்டுமென்னும் உண்மையைப் பலர் அறிகிலர். அடியேன் ஞால முழுதினையுங் கடந்து அண்டமுகட்டினையும் ஊடறுத்து எங்கும் நிறைந்து நின்றருளும் சிவபெருமான் திருவடியினை அவனருளால் அவன்பணி செய்துகிடந்து மேலும் மேலும் விரும்புவன்.

(5)

226. காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாணாள் கழிவதுஞ்1
சாலும்அவ் வீசன் சலவிய னாகிலும்2
ஏல நினைப்பவர்க் கின்பஞ்செய் தானே.

(ப. இ.) ஒவ்வொரு நாளும் காலையில் கிழக்கே எழும் பகலவன் மாலையில் மேற்கே சென்று மறைகின்றனன். அவ்வாறு மறைவதைக் கண்டு பலர் இன்பமுடன் பொழுது போகாநின்றதெனக் களித்து அந்நாளைக் கழிப்பர். ஆனால் உண்மையான் நோக்கினால் அப்பொழுது ஒவ்வொரு நாளும் அவருடைய வாழ்நாளின் ஒவ்வொரு கூறையும் அவர் மகிழும்படியாக அறுத்துக் கொண்டு செல்கின்றது. அங்ஙனம் இறைவன் செய்வதுதான் நடப்பாகிய ஆதியாற்றலின் மறைப்பருள். எல்லா நிறைவும் இயற்கையிலேயே ஒருங்கமைந்த அவ்விறைவன் நினையாதார்மாட்டு நினைப்பிக்கும்படி செய்தருள் முனிவுள்ளவன் போன்று காணப்படினும் தக்கவாறு நினைவார்மாட்டு இடையறா இன்பஞ் செய்யும் தடையிலாக் கனிவுள்ளவனாவன். சலவியன் - வழிவாராதார்மாட்டு முனிவுள்ளவன். ஏல - தகுந்த முறையால்.

(6)

227. கண்ணனுங்3 காய்கதி ரோனும் உலகினை
உண்ணின் றளக்கின்ற தொன்றும் அறிகிலார்
விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே.

(ப. இ.) ஒவ்வொருநாளும் காய் கதிரோன் காலை, நண்பகல், மலைமறைந் தொளித்தல் என்னும் மூன்று கூறாக, உலகத்துள் நின்று அளக்கின்றனன். அதுபோல் கண்ணனும் உடலுள் நின்று ஒருவனுடைய வாழ்நாள் முழுமையையும் கல்வி கற்றல், மனையறம் பேணல், இறைவன் பால் நினைவகலாமை என மூன்று கூறாக அளக்கின்றனன். அவன் பதினாறு ஆண்டுவரை கல்வியும், நாற்பத்தாறு ஆண்டுவரை மனையறம் பேணலும், அதற்கு மேல் நிறை வாழ்நாள் என்னும் நூற்றிருபது ஆண்டுவரை இறை நினைவு அகலாமையுமாக ஆருயிர்களைக் காத்து நிறுத்தலாகிய அளவையைச் செய்கின்றனன். இம் மூன்றனையும் ஒரு புடையாக இன்பம் பொருள் அறம் என்னும் முப்பகுதியின் சிறப்பியல்பு என்னலாம். எடுத்துக்காட்டாக மனையறம் பேணுதல் பொருளின் சிறப்பியல்பாயின் ஏனை இன்பமும் அறமும் அம் மனையறத்திற்குப் பொது இயல்பு என்க. அது போல் மற்றவற்றிற்குங் கொள்க. 'முப்ப


1. நாளென. திருக்குறள், 334.

2. தந்தைதாய். சிவஞானசித்தியார், 2. 2 - 12.

3. (பாடம்) கண்ணதுங்.