கொள்வார் புல்லறிவினர். நில்லாத உடம்பையும் நிலை என்று நீடு நினைக்கும் பீடிலாதவர்களே! விழுமிய முழுமுதற் சிவபெருமான் எல்லாவுயிர்க்கும் இயைந்தியக்கும் அறமுறை நீங்கா இறைவனாவன். ஆயினும் திருவடியுணர்வு கல்லாதார் உள்ளத்துத் ததிநெய்போல் விளங்கிக் காண வொண்ணாது பாலில் நெய்போல் மறைந்து நிற்பன். ததி - தயிர். நெய் - வெண்ணெய். குரம்பை - உடம்பு. கல்லாதார் - திருமுறை கல்லாதார். (3) 300. கில்லேன் வினைத்துய ராக்கு மயலானேன் கல்லேன் அரனெறி1 அறியாத் தகைமையின் வல்லேன் வழங்கும் பொருளே2 மனத்தினுட் கல்லேன் கழியநின் றாடவல் லேனே. (ப. இ.) திருவடியுணர்வு கற்றலினும் நன்னெறி நிற்கும் பற்றினிலும் பொருந்தும் ஆற்றல் இல்லேன். அதனால் எஞ்ஞான்றும் பிறப்பிற்கு வித்தாம் இருவினைத் துயரைப் பெருக்கும் இருள் மயக்கினுக்கு உட்பட்டேன். திருவடியைச் சேர்க்கும் சிவனெறியாகிய அரனெறியைப் புண்ணியப் பேறின்மையாற் கல்லேன். அதனால் நன்மை அறியாத் தன்மைசேர் புன்மையின்வல்லவனானேன். ஐம்புலன் நுகர்வில் அடங்கா அவாவும் அதற்கு வேண்டும் பொருள்களைக் கூட்டும் முயற்சியில் நாட்டமும் விடாது மனத்துள் அடைபட்டுக் கிடக்கின்றன. இவற்றை யகன்று நன்னெறி ஒழுகக் கல்லேன். நன்னெறிக்குச் சேயனாய் நின்று புன்னெறியில் ஒழுக வல்லேன். இனி வழங்கும் பொருளை மனத்தினுட் கல்லேன் எனக் கொண்டு 'கொடுத்தலும் துய்த்தலும்' என்னும் செந்தமிழ் முறைக்கு மாறாகப் பொருள்களைத் துய்த்தலே உய்வென்று ஓவாது கருதி வழங்குவதாகிய கொடுத்தலை மனத்துட் கல்லேன் எனலும் ஒன்று. (அ. சி.) கில்லேன் - ஆற்றகில்லேன். வழங்கும்பொருள் - ஐம்புல வாயிலாய் அறியும் பொருள். (6) 301. நில்லாது சீவன் நிலையன் றெனவெண்ணி வல்லார் அறத்துந் தவத்துளும்3 ஆயினார் கல்லா மனித்தர் கயவர்4 உலகினில் பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே. (ப. இ.) பிறப்பற முயலும் வல்லாராகிய அறவோர் ஆவி இவ்வுடலகத்து எந்நாளும் நிலையாக நில்லாது என்றும், இவ்வுடலும் இவ்வுலகத்து நிலையாக நில்லாதென்றும், இவ்வுலகமும் காரணத்தொடுங்குவதல்லது நிலையாக நில்லா தென்றும் வழியளவையான் உண்மை உணர்வர். உணர்ந்து இம்மை உம்மை வாழ்வுக்குத் துணையாம் அறத்தினையும், அம்மை வாழ்வுக்குத் துணையாம் சிவத்தைப் பேணுதலாகிய தவத்
1. கற்றிலேன். அப்பர் 4. 78 - 2. 2. வென்றிலேன் " " " 1. 3. பெற்ற. " 5 . 5 - 2. 4. பற்றிலா. 4 - 3 1 - 8. " எற்றிற். திருக்குறள், 1080.
|