1419. பத்தர் சரிதை படுவோர் கிரியையோர் அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர் சுத்த வியமாதி சாதகர் தூயோகர் சித்தர் சிவஞானஞ் சென்றெய்து வோர்களே.1 (ப. இ.) சீலநெறியிற் செல்வோர் பத்தர் எனப்படுவோர். நோன்பு நெறியிற்செல்வோர் தொண்டர் எனப்படுவர். இயற்கை இயமாதி எண்ணுறுப்புங் கைக்கொண்டோர் சிவயோகர் எனப்படுவர். சிவனை மறவாச் செய்கையோர் சிவஞானி எனப்படுவர். இவர்களே சித்தராவர். இவர்கள் முடிபே சித்தாந்தம். இந் நால்வரும் திருவெண்ணீறு, சிவமணி, திருவைந்தெழுத்து முதலிய திருக்கோலமுடையவராவர். எண்வகையுறுப்பு: அடக்கம், நடக்கை, இருக்கை, வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைவு, சமாதி என்பன. இவற்றை இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி எனவும் (பிங்கலந்தை. 419) கூறப. சமாதி - சிவநிறைவு. (அ. சி.) பத்தர் - சரியையாளர். தொண்டர் - கிரியையாளர். சாதகர் - யோகிகள். சித்தர் - சிவஞானிகள். (3) 1420. சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவ னாயினோர் சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோர் ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர் நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே.2 (ப. இ.) திருவடியுணர்வு கைவரப்பெற்ற சிவஞானியர் சிவனிறைவில் அடங்கிச் சிவனாயிருப்பர். எண்வகைத் தவத்தால் சிவயோகம் மேற்கொண்டவர் சிவனார் திருவுருவினைப் பெறுவர். நோன்பினராய கிரியையாளர் சிவன் அணுக்கராயிருப்பர். சீலத்தராய கரியையாளர் சிவவுலகினிலிருப்பர். நீள்நிலம் - சிவவுலகம்; அழியாவுலகம். (அ. சி.) தானவனாயினோர் - சாயுச்சியம். சேர்ந்தவெண்யோகத்தார் - சாரூபத்தார். அர்ச்சனை தப்பாதோர் - சாமீபத்தார். நீணிலத்தோர் - சாலோகத்தார். இம் மந்திரம், சரியையாளர் சாலோகத்தையும், கிரியையாளர் சாமீபத்தையும், யோகத்தார் சாரூபத்தையும், ஞானத்தார் சாயுச்சியத்தையும் அடைவர் என்றது. (4) 1421. கிரியை யோகங்கள் கிளர்ஞான பூசை அரிய சிவனுரு அமரும் அரூபந் தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை உரியன நேயத் துயர்பூசை யாமே. (ப. இ.) நோன்பு செறிவு அறிவு என்னும் முப்பருவத்தும் அழியாப் பயனளிக்கும் என ஆய்ந்தெடுத்துச்செய்யும் சிவபூசை, தலையன்பால் செய்யும் உயர்வற உயர்ந்த உரிய பூசையாகும். இவற்றுள்
1. தொண்டர்காள். 8. திருப்படை எழுச்சி; 2. " தாதமார்க். சிவஞானசித்தியார், 8 2. 9. 2. சன்மார்க்கம். சிவஞானசித்தியார், 8. 2 - 8.
|