(ப. இ.) ஞாயிறாகிய வலப்பால் மூச்சும், திங்கள் ஆகிய இடப்பால் மூச்சும் எடுத்தும், தடுத்தும், விடுத்தும் பயிலுங்காலத்து ஆராய்ந்து மேற்கொள்ளும் மந்திரத்துண்மையினை உள்ளவாறுணர்ந்து ஆரும் அறிகிலர். செவ்வரி பரந்த திருக்கண்களையுடைய திருவருளாற்றலால் வெளிப்படும் ஒலி ஒளிமெய்களாகிய நாதவிந்து தத்துவங்களினின்றும் எழுத்துக்கள் வெளிப்படும். அவ் வெழுத்தானாகிய மந்திரங்களுள் திருவைந்தெழுத்தே முதன்மையாகும். அவ் வைந்தெழுத்தே உயிர்ப்புப் பயிற்சியினுக்கு ஒப்பில் திருமறையாகும். அத் திருமறையினை வாயார வாழ்த்தி வழுத்துவோமாக. (அ. சி.) ஞாயிறு - பிங்கலை. திங்கள் - இடகலை. (6) 2655. குருவழி யாய குணங்களி னின்று கருவழி யாய கணக்கை யறுக்க வரும்வழி மாள மறுக்கவல் லார்கட்கு அருள்வழி காட்டுவ தஞ்செழுத் 1தாமே. (ப. இ.) சிவகுருவானவர் அருளிச் செய்த செவியறிவுறூவாகிய திருவைந்தெழுத்தின் மாறாப் பண்பினின்று கருவழிப் புகுவதற்கு வாயிலாகிய எஞ்சு வினையையும் ஏறுவினையையும் அறுத்தகற்றலாகும். அம் முறையான் வரும் வழியினை மாளச் செய்யவும் மறுக்கவும் வல்லார்க்குத் திருவருள் திருவைந்தெழுத்தின் வழியினைக் காட்டும். திருவைந்தெழுத்துப் பொருண்மறையாகும் அவற்றின் விரிவே அனைத்து தூலுமாகும். அவை பன்னிரு திருமுறையும் பதினான்கு மெய்ந்நூற்களும் என்ப. (அ. சி.) குணங்கள் - சாதனங்கள். கணக்கை - வகையை. மறுக்க - தடுக்க. (7) 2656. வெறிக்க வினைத்துயர் வந்திடும் போது செறிக்கின்ற நந்தி திருவெழுத் தோதுங் குறிப்பது வுன்னிற் குரைகழல் கூட்டுங் குறிப்பறி வான்றவங் கோனுரு 2வாமே. (ப. இ.) அஞ்சும்படியாகத் தீவினைத் துன்பம் தொடர்ந்து வந்திடும். அப்பொழுது எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கின்றவன் நந்தி. அவன் திருப்பெயர் திருவைந்தெழுத்தாகும் அத் திருவைந்தெழுத்தை விதிப்படி யோதும் குறிப்பதை உள்ளத்து உறுதியாக நினைந்து ஓதி வந்தால் அவ்வோதும் தவம் சிவபெருமானின் ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த திருவடியிணையினைக் கூட்டுவிக்கும் வீரக்கழல் - மறைச் சிலம்படி. அத்தகைய இறப்பில் தவத்தின் குறிப்புணர்வான் - சிவனடிக் கீழ் சிவனுருவாய் நிலைத்திருப்பன். (அ. சி.) வெறிக்க - மயங்க. தவம் - தவத்தால். (8)
1. விண்ணுற. அப்பர், 4. 11 - 3. " அஞ்செழுத்தே. உண்மை விளக்கம். 44. 2. இருந்து. அப்பர், 5. 90 - 4. " எம்பிரான். " 4. 76 - 3.
|