1186
 

2850. ஒத்த மனக்கொல்லை யுள்ளே சமன்கட்டிப்
பத்தி வலையிற் பருத்தி நிறுத்தலால்
முத்தக் கயிறாக மூவர்கள் ஊரினுள்
நித்தம் பொருது நிரம்பநின் 1றாரன்றே.

(ப. இ.) நேர்மையான மனக்கொலையினைச் செம்மைப்படுத்திப் பத்திவலையினைப் பரப்பினால் பருத்தியாகிய சிவன் ஆண்டு வெளிப்பட்டு நிற்பன். அளவின்றி முறுக்கேறிய கயிறு அறந்து அழிவதுபோல் முக்குணங்களும் அழிந்தன. ஊராகிய எண்ணத்தினுள் தன்னைச் சார்ந்த மெய்யடியார்களைக் காத்தல் தலைவராகிய சிவபெருமானார் தனிக் கடனாதலின் 'நித்தம் பொருதென்றனர்.' முக்குணம் அகலவே எக்காலுமுள்ள மிக்க சிவபெருமான் நிரம்ப நின்றருளினன். முக்குணத்தையும் ஒருபுடையொப்பாக மும்மலகாரியம் எனல் அமையும். அமைதிக் குணம் மாயையின் காரியம். ஆட்சிக்குணம் கன்மத்தின் காரியம், அழுந்தற்குணம் மலத்தின் காரியம்.

(அ. சி.) சமன்கட்டி - செவ்விதாக அமைத்து. பருத்தி - சிவம். முத்தக்கயிறு - முறுக்கு அதிகப்பட்டு அறுபட்ட கயிறுபோல. மூவர் - முக்குணங்கள். ஊரினுள் - சித்தத்தில். நிரம்ப - பூரண சிவமாக.

(25)

2851. கூகையுங் பாம்புங் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன
நாகையைக் கூகை நணுக லுறுதலுங்
கூகையைக் கண்டெலி கூப்பிடு 2மாறன்றே.

(ப. இ.) கூகையாகிய அறியாமையும், பாம்பாகிய சுட்டறிவும், கிளியாகிய அறமும், பூஞையாகிய பாவமும், நாகையாகிய சிற்றறிவும், பூழாகிய அறுபகையும், உடம்பின் நடுவாகிய எண்ணம் என்னும் சித்தத்தின்கண் உறைவன. உறைதல் - தங்கியிருத்தல். நாகையாகிய சிற்றறி வினைக் கூகையாகிய அறியாமை நணுகமுயலும். அப்பொழுது அருள் ஒளிபெற்ற வெள் எலியாகிய ஆருயிர் சிவனை நினைந்து கூவும். சிவனும் வெளிப்பட்டுக் கூகையை அடக்கியருளவன்.

(அ. சி.) கூகை - அஞ்ஞானம். பாம்பு - காமம். கிளி - அறம். பூஞை - மறம். நாகை - சிற்றறிவு. பூழும் - குரோதமும். நடுவில் - சித்தத்துள். எலி - சீவன்.

(26)

2852. குலைக்கின்ற நன்னகை யாங்கொங் குழக்கின்
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்
உலைக்குப் புறமெனில் ஓடு மிருக்கும்
புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.

(ப. இ.) மனத்தகத்து எழும் நன்மைகளைக் குலைத்தலைச் செய்வது தீய எண்ணங்கள். அவற்றைத் திருவருள் நன்னகை என்று சொல்லப்


1. சமன்செய்து. திருக்குறள், 118.

2. பகல் வெல்லும். திருக்குறள், 481.