உக்குறள் மெய்விட்டோடும்' என்பதன்கண் 'ஓடும்' என்றமையால் ஒரோவழிக் குற்றுகரமும் முற்றுகரம்போற் புணரும் என்பது காண்க. (அ. சி.) மொட்டித்து - தவத்தால். வெளிப்பட்டு. மொட்டு = சிவானந்தம். கட்டுவிட்டு - யான், எனது என்னும் கட்டை நீக்கி. மலர்தல் - சிவானந்தம் வெளிப்படுதல். பற்றுவிட்டு - மனதைப் பற்றில்விட்டு. மனை - முத்திவீடு. (53) 2879. நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம் யாவரும் என்றும் அறியவல் லாரில்லை கூரு மழைபொழி யாது பொழிபுனல் தேரினிந் நீர்மை திடரினில் 1லாதன்றே. (ப. இ.) எண்ணமாகிய சித்தச் செலவு நீரெனப்பட்டது. சிவன் 'சித்தமும் செல்லாச் சேட்சியன்'; ஆதலின் அவன் சித்தம் ஒடுங்கிய விடத்துத் தானே பாய்ந்து வெளிப்படுவன். அதனால் நீரின்றிப் பாய்வன் என்றனர். நிலமாகி உணர்வெண்ணத்துள் சிவப்பெரின்பம் வெளிப்பட்டு விளங்கும். பச்சை யென்பது அவ் வின்பம் என்றும் பொன்றாது ஒன்றுபோல் விளங்குவது பற்றிக் கூறப்பட்டதொன்றாகும். இவ்வுண்மையினைத் திருவருள் எய்தாத எவரும் யாண்டும் அறியவல்லாரல்லர். மிக்கோங்கும் பொறிபுலனின்பம் பொழியாது. பொழியாதாகவே சிவப் பேரின்பம் கழியா அழியாப் பெருவெள்ளமாகச் சுரந்து நிற்கும். ஆராய்ந்துணரின் இத் தன்மையனாகிய அவன் 'கள்ளமுள்வழிக் கசிவானலன்'. அஃதாவது சிவன் திருவடியைப் பற்றாது நிற்கும் பாவிகள் உள்ளம் தூர்ந்த கிணறுபோல் திடராகும். திடரில் நீர் நில்லாமை யாவரும் தெரிந்ததே. அம்முறையில் சிவனும் நில்லான் பொல்லார் எண்ணத்தின்கண். (அ. சி.) நீர் - நினைந்து எண்ணும் எண்ணங்கள். பாயும் சிவானந்த வெள்ளம் பாயும். நிலம் - சித்தம். பச்சையாம் - சிவம் வெளியாம். கூரும் மழை பொழியாது - இந்திரியச் சேட்டைகள் இல்லாது. பொழிபுனல் - சிவானந்த வெள்ளம். இந் நீர்மை - இத் தன்மை. திடர் - இந்திரிய வயப்பட்ட சித்தம். (54) 2880. கூகை குருந்தம தேறிக் குணம்பயில் மோகம் உலகுக் குணர்கின்ற காலத்து நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும் பாகனு மாகின்ற பண்பனு 2மாகுமே. (ப. இ.) அருட்கண்ணாகிய அகக்கண் திறப்பிக்கும் வரை ஆருயிர்க்கிழவர் 'பொருட் கண்ணிழந்து உண்பொருள் நாடிப் புகலிழந்த' பகல் குருடராவர். அதனால் அவர் கூகை என உருவகிக்கப்பட்டனர். சிவகுரு
1. உள்ள. அப்பர், 5. 82 - 4. 2. இருடரு. அப்பர், 4. 92 - 4. " அருக்கனேர். சிவஞானபோதம், 11. 2 - 1. " ஐம்புல வேடரின். " 8. " மருளனேன். 8. அருட்பத்து, 9.
|