1207
 

2886. பாசி படர்ந்து கிடந்த குளத்திடைக்
கூசி யிருக்குங் குருகிரை தேர்ந்துண்ணுந்
தூசி மறவன் துணைவழி எய்திடப்
பாசங் கிடந்து பதைக்கின்ற 1வாறன்றே.

(ப. இ.) குளமாகிய ஆருயிர்களின் உள்ளத்தினிடத்துப் 'பாசியாகிய காமம் வெகுளி மயக்கங்கள் படர்ந்து கிடந்தன. அவ் வுள்ளத்துடன் கூடியிருக்கும் குருகாகிய ஆருயிர் இரையாகிய ஐம்புல நுகர்ச்சிகளை நலம் பொலம் ஆய்ந்து நுகரும் உய்யவேண்டும் துணைக்கருவிக் கூட்டங்களுள் ஒன்றாகிய பற்றறுதி என்றும் கொடிப்படை தாங்கி முற்செல்லும் ஆண்மை மறவன் துணைவழிச் செல்வன். செல்லவே காமம் வெகுளி மயக்கமென்னும் பாசங்கள் நிலையின்றி மெலிந்து பதைபதைத்து அடங்கி யழியும். அதுவே அவற்றை வெல்லும் வழியுமாகும். பற்றறுதி - வெறுப்பு; வைராக்கியம். தூசி - கொடிப்படை; முற்படை.

(அ. சி.) பாசி - ஆசை. குளம் - சித்தம். குருகு - சீவன். இரை - இந்திரிய விடயங்களை தூசி மறவன் - வைராக்கியம் பதைக்கின்றவாறு - கெடும்.

(61)

2887. கும்ப மலைமேல் எழுத்தோர் கொம்புண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு
வம்பாய் மலர்ந்ததோர் பூவுண்டப் பூவுக்குள்
வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே.2

(ப. இ) புலன் நோக்கம் அடங்கிய சித்தம் கும்பமலை எனப்பட்டது. அதன்கண் உண்டாகிய திருவடிப் பேரின்பம் என்னும் கிளையொன்று உண்டு. அப் பகுதியாகிய பேரின்பம் தொடர்ந்து வருமாறு திருவருளால் வீசுவதோர் தென்றலாகிய தமிழ் மென்காற்று ஒன்று உண்டு. இயற்கை நறுமணங் கமழும் மெய்யுணர்வு வடிவாய் விளங்கும் அழியா ஆருயிர் மலர் ஒன்றுண்டு. அப் பூவினுள் விழுமிய முழுமுதற் சிவன் வண்டாகப் பின்னிக்கிடந்து மணங்கொண்டு இன்புறுத்துவன். மணங்கொள்ளுதல்: கலத்தல்.

(அ. சி.) கும்பம் - இந்திரியச் சேட்டைகள், அடங்கிய மனம். கொம்பு - இன்பம். காற்று - இன்ப உணர்ச்சி. வம்......பூ - ஞான மயமான ஆன்மா.

(62)

2888. வீணையுந் தண்டும் விரவி யிசைமுரல்
தாணுவும் மேவித் தகுதலைப் பெய்தது
வாணிபஞ் சிக்கென் றதுவடை யாமுன்னங்
காணியும் அங்கே கலக்கின்ற 3வாறன்றே.

(ப. இ.) அகத்தவம் என்று சொல்லப்படும் உயிர்ப்புப் பயிற்சியால் பத்துவகையான முழக்கம் (586) அகத்தே எழும். அவற்றுள் யாழொலி


1. தொண்டர்காள். 8. திருப்படையெழுச்சி, 2.

2. அற்புதத். 9. கருவூர்த் தேவர், கங்கை - 3.

3. அருந்தின்பத். சிவஞானசித்தியார், அளவை யிலக்கணம், 7.