எனவும், கோடிக்கணக்கான எண்ணிக்கை வகைகளுள் ஏதாவது ஒன்று எனவும், காலமும் எண்ணும் மிகச் சிறியவாகவுள்ள ஒன்று எனவும் பொருள்படும். உலகுக்கு என்றும் பொன்றாப் புகலிடமாய் உள்ளவன் சிவபெருமான். உலகினுக்குப் பல்லக விளக்காக விஞ்சும் ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்றனையும் படைத்தமைத்தவனும் அவனே. அவனே எல்லாம் வல்ல முடிவிலாற்றலையுடையவன். ஒளி திகழ் நாதத்தை: அப்பாற்பட்ட ஒளிமெய்யைத் தொழிற்படுத்தும் ஒளி வண்ணமாய்த் திகழும் சிவபெருமானை. இந் நிலையினைப் பரநாதம் என்ப. நச்சி - விரும்பி. தச்சுமவன் - புகலிடமாயுள்ளவன் (தச்சும்: தஞ்சம்). விச்சும்: விஞ்சும். இவை எதுகை நோக்கி வலித்தல் திரிபு எய்தின. (அ. சி.) விச்சும் - மேலான. சுடர் மூன்று - சூரியன் - சந்திரன் அக்கினி. (2) 428. குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக் குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன் குசவனைப் போல்எங்கள் கோல்நந்தி வேண்டில் அசைவில் உலகம் அதுஇது வாமே.1 (ப. இ.) களம் பல படைக்கும் வேட்கோவாகிய குயவன் தகுதியாம் மண்ணைச் செய்வன செய்து திரிகையில் ஏற்றுவன். ஏற்றிய மண்ணை அக் குயவன் நல்லுள்ளத்தில் எண்ணியவாறே பல்வேறு வகைக் கலங்களாக்குவன். அங்ஙனம் ஆக்குவதும் தன்பொருட்டு அன்று. ஆருயிர்களின் நன்மையின் பொருட்டேயாம். அவ்வியிர்களின் வளர்ச்சி முறைக்கு ஏற்றவாறு பல்வேறு கலங்கள் வேண்டப்படுவவாயின. அக்குயவனைப்போல் எங்கள் பேரறிவுப் பெருந் தலைவராம் நந்தியடிகள் உன் முகமாய்த் திருவுள்ளங் கொள்ளில் காரணத்தில் அசைவில்லாத தன் வைப்பாற்றலாம் மாயையினின்று அதுஇது என்று சொல்லப்படும் பல உடல் உலகம் உண்பொருள்கள் தோன்றுவவாயின. நந்தி யெங்கடவுளாகிய சிவபெருமானும் இப்படைப்புத் தொழிலினை ஆருயிர்களின் நன்மையின் பொருட்டே செய்தருள்கின்றனன். அவ்வுயிர்களின் பொருட்டே அவையும் பல்வேறுவகையாக அமைந்துள்ளன. (அ. சி.) அதுவி துவாமே - பலவகை. (3) 429. விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப் படையுடை யான்பரி சேஉல காக்குங் கொடையுடை யான்குணம் எண்குண2 மாகுஞ் சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே. (ப. இ.) ஆனேற்றை ஊர்தியாகவும் உயர்த்துங்கொடியாகவும் உடையவன் சிவன். ஒருவரால் படைக்கப்படாது தானே திருவருளால்
1. உள்ளதே. சிவஞானபோதம் 2. 2 - 1. " படைத்ததொரு சிவப்பிரகாசம், 6. 2. கோளில். திருக்குறள், 1. " எட்டு அப்பர், 5. 89 - 8.
|