417
 

1026 .குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்
கொண்ட அரத்த நிறமன்னு கோலத்தள்
கண்டிகை யாரங் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.

(ப. இ.) ஆருயிர்கள் உய்தற்பொருட்டு அம்மைகொண்ட திருக்கோலம் வருமாறு: குண்டலக்காதும், கொல்லும் தகுதி வாய்ந்த விற்போலும் புருவமும், ஆடை அணி பூச்சு முதலிய அனைத்தும் செம்மை நிறம் வாய்ந்தனவும், சிவமணி மாலையும், ஒளிமணி முடியும் ஆகும். அவள் தானே விளங்கும் இயற்கையுணர்வினையும் உடையவள். சண்டிகை என்னும் திருப்பெயரினள். எப் புலத்துள்ளவர்களும் அம்மையை வழிபடும் பொருட்டு அவள்பால் வேண்டிப்பெற்ற வரப்பேற்றால் அம்மைகொண்ட திருக்கோலம் இதுவாகும்.

(அ. சி.) சண்டிகை - அம்பிகையின் பெயர்.

(6)

1027 .நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் குஞ்சிகை
நன்றறி கண்டிகை நாற்காற் கரீடணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.

(ப. இ.) உயிருய்யக் கலந்துநிற்கும் அம்மை திரிபுரை என்று சொல்லப்பெறுவள். நிலைபெற்ற தொன்மையள். நிலைபெற்ற - ஒரு தன்மையாயுள்ள. குறையாத அழகுடையவள். அழகுமிக்க கூந்தலையுடையவள். சிவனெறி அடையாளமாம் சிவமணி பூண்டவள். நான்கு உரல்போலும் கால்களையுடைய பிடியானையை ஊர்பவள். நெருங்கிய பல இதழ்களையுடைய தூய தாமரையில் வீற்றிருக்கும் தூயவுடம்பினள். குன்றலில் - குறைதலில்லாத. மோகினி - அழகினையுடையவள். மாது - அழகு.

(அ. சி.) குன்றலில் மோகினி - குறைதல் இல்லாத அழகினை உடையவள். நாற்காற் கரீடணி - யானை வாகனம் உடையவள்.

(7)

1028 .சுத்தவம் பாரத் தனத்தி சுகோதயள்
வத்துவ மாயா ளுமாசத்தி மாபரை
அத்தகை 1யாவும் 2அணோரணி தானுமாய்
வைத்தவக் கோல மதியவ ளாகுமே.

(ப. இ.) தூய கச்சினையும் முத்துமாலையினையும் அணிந்த மார்பினையுடையவள். இன்ப வூற்றாம் இயல்பினள். மாயையைத் தொழிற்படுத்தும் பொருளாயுள்ளவள். உமையவள், ஆற்றலள், பெரும்பொருட் செல்வி, முதலிய சிறப்புப் பெயரினள். அன்பருள்ளத்துறையும் அழகினள். இத்தகைய கோலங்களோடு கூடிய அம்மை மெய்யுணர்வு உருவினளா


(பாடம்) 1. யான.

2. " மனோரணி.