1139 .குத்து முலைச்சி குழைந்த மருங்கினள் துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத் தொத்த கருத்தது சொல்லகி லேனே.1 (ப. இ.) ஆருயிர்கட்கு அறிவமிழ்தம் அளவறிந்து ஊட்ட ஏந்தும் திருமுலையினையும், அவ்வுயிர்களை உளங்கொண்டு சுமத்தலால் துவளும் திருமருங்கிணையும் உடைய அருளம்மை, பொறியமைந்த தேமலையுடையவள். அவளே தூய திருமொழியினையுடையவள். அவளே மெய்யுணர்வு நூல் கைவரச் செய்யும் சிறிய திருவடியையுடையவள். அவளே உயிரோவியத்தள். அவள் மறவா நினைவுடன் ஆருயிரோடு ஒன்றாய் வேறாய் உடனாய்ப் புணர்ந்து நிற்கும் பழைமையான திருக்குறிப்பிணைப் புகலும் ஆற்றலில்லேன். குத்தல் - அளவாய் வார்த்தல். புத்தகம்: ஆகுபெயராக மெய்யுணர்வைக் குறிக்கும். தொத்த - பழைமையான. (அ. சி.) துத்தி - பொறிகளை உடைய. சுணங்கினள் - தேமலை உடையவள். புத்தகம் - மயிலிறகு போன்ற மென்மையான. (9) 1140 .சொல்லவொண் ணாத அழற்பொதி மண்டலஞ் செல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள் வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகி மல்லவொண் ணாத மனோன்மனி தானே. (ப. இ.) சொல்லமுடியாத பேரொளிப்பிழம்பு சூழ்ந்த சிவவுலகு பெற்றார் பேற்றினைக் கண்டு பேறுபெறும் செவ்வியில்லார் சொல்லவும் முடியாதபடி திகைத்திருப்பர். அங்ஙனமிருப்பதும் மாற்றமுடியாத நடப்பாற்றலின் மறைப்பருளேயாகும். அவள் அத் துறையின்கண் தனிப்பெரும் தலைவியாவள். அவள் மனோன்மனி எனப்படுவள். அவளை வெல்லுதல் எவருக்கும் இயலாததொன்று. (அ. சி.) வினை - மறைத்தல் தொழில். மல்ல - வெற்றிகொள்ள (10) 1141 .தானே இருநிலந் தாங்கிவிண் ணாய்நிற்குந் தானே சுடும்அங்கி ஞாயிறுந் திங்களுந் தானே மழைபொழி தையலு மாய்நிற்குந் தானே வடவரைத் தண்கடற் கண்ணே.2 (ப. இ.) திருவருளம்மையே இருநிலமாகவும், பூதங்களைத் தாங்கும் விண்ணாகவும், தீ ஞாயிறு திங்கள் என்னும் முச்சுடர்களாகவும், நீருக்கு
1. போதையர். சம்பந்தர், 2. 146 - 2. " எண்ணரிய. 12. " 68. " கல்லாதான். திருக்குறள். 402. 2. இருநிலனாய். அப்பர், 6. 94 - 1. " மண்ணாகி. " " " 2.
|