821
 

வருத்தி நற்றவம் புரிந்து பற்றறுத்துச்சிறப்புற்றுயர்ந்து வாழ்வார் ஒருசிலராவர். அந் நெறிக்கு வாராது வழுக்குகின்றாரும் பலராவர்.

(அ. சி.) அருத்தி - அன்பு. அமராபதி - தேவலோகம். வருத்தி - தவத்தால் உடலை வாட்டி. வழுக்குகின்றார் - நெறி தவறுகின்றார்.

(15)

2061. குதித்தோடிப் போகின்ற கூற்றமுஞ் 1சார்வாய்
விதித்தன நாட்களும் வீழ்ந்து கழிந்த
அதிர்த்திருந் தென்செய்தீ ராறுதி ராகிற்
கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே.

(ப. இ.) வினைக்கீடாக வரையறுக்கப்பட்ட நாள்களும் கழிந்தன. ஆகுல நீரராய்ப் பயனில மொழிந்தும் நயனிலபுரிந்தும் பொழுதுபோக்கி என்செய்தீர்! கூற்றம் குதித்தோடிப்போய் ஆற்றல்வாய்ந்த சிவத்தைப் பேணுதலாகிய நற்றவம் புரிகின்றிலீர். என்செய்வீர்! ஆறுதலாகிய 'அகனமந்த வன்பினராய் அறுபகைசெற்று ஐம்புலனும் அடக்கி ஞானப் புக'லினை எய்துவோர் ஆருயிர் கொதிக்கின்ற கூழொத்துக் காணப்படும் சிவபெருமான் திருவடியின்பில் துடுப்பிடுதல் ஒத்து அணைந்து இன்புறும்.

(அ. சி.) அதிர்த்திருந்து - ஆடம்பரமாக இருந்து. ஆறுதிராகில் - மனமாதி அடங்கப்பெற்றால். கொதிக்கின்ற கூழ் - சிவச்சோதி. துடுப்பிடல் - ஆன்மா ஒருமை அடைதல்.

(16)

2062. கரையரு காறாக் கழனி விளைந்த
திரையரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும்
வரையரு கூறிய மாதவ நோக்கின்
நரையுரு வாச்செல்லு நாளில வாமே.

(ப. இ.) 'உணர்ந்தார்க்கு உணர்வரியோன் தில்லைச் சிற்றம்பலத்து ஒருத்தன்' ஆகலின் அவனை அணையமுயல்வார் மனம் அடங்கிய எல்லையாகிய கரையின்கண் திருவடிப்பேரின்பக் கழனியாகிய சிவப்பேறு ஆற்றுப் பெருவெள்ளம்போன்று விளைந்து திகழ்கின்றது. நல்லோர் திரைப்பருவமாகிய முதுமை எய்துவதன்முன் திருவருளால் இரண்டறக் கூடிக் கலந்து இன்புறுதற்குப் பொருந்தும் பெருந்தவம் புரிவாராயினர். அதனால் உணர்வுள்ளத்து எல்லையிலாப் பேரின்பம் ஊறிப் பெருகுவதாயிற்று. இந் நன்னெறிக்கண் வாராத சில்லோர் நரைமுதிர் யாக்கையினராய்ச் சாநாளெய்தி வருந்துகின்றனர். அத்தகைய நாள் நற்றவத்தோர்க்கில்லென்ப.

(அ. சி.) கரையருகு - சிவக்கருணை ஆற்றின் கரையை அடுத்துள்ள - கருணைக்குரிய. ஆறாக் கழனி - சிவக்கருணை வெள்ளத்தில் திளைக்கின்ற ஆன்மாக்கள். விளைந்த - உண்டான சிவானந்தத்தை. திரை அருகா முன்னம் - நரைதிரை உண்டாகா முன்னம். வரை அருகு - மலையைச்


1. கூற்றம். திருக்குறள், 269.

" இழைத்தநாள். நாலடியார், 6.