1165
 

(அ. சி.) அம்பு ஊடு அறுக்கிலென் - அம்பு ஊடுருவிப் பாய்ந்தாலென். உழுவை - புலி. ஏனைப் பதி - ஞானபூமி. ஞானத்துழவு - ஞானம் அடைவதற்கு உரிய ஆராய்ச்சி.

(5)

2808. கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வானுளன்
நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை
வீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும்
பாடது நந்தி பரிசறி 1வார்கட்கே.

(ப. இ.) கூடு பழுதுற்றால் மற்றோர் கூடு அமைப்பது உலகியல் வழக்கல்லவா? அதுபோல் இவ்வுடம்பு கேடெய்துமானால் வினைக்கீடாக மற்றோர் உடம்பினைச் சிவபெருமான் படைத்தளிக்கின்றனன். அங்ஙனம் புத்துடல் படைத்தளிக்கப்படினும் ஆருயிர் முன்னியைந்துள்ள பழைய உயிரேயாகும், என்னை? உயிர் படைக்கப்படுவதொன்றன்றாகலானென்க. ஒருநாடு மழையின்மை முதலியவற்றான் கேடெய்தின், அந்நாட்டவர் வேற்றுநாடு புக்குக் குடியேறி வீற்றிருப்பரன்றோ? அந்நிலை இதற்கொப்பாகும். அக்குறிப்பு 'நாடுகெடினும் நமர்கெடுவாரில்லை' என ஓதியதனால் விளங்கும். மேலும் எவ்வகையாலேனும் குடியிருக்கும் வீட்டினுக்குக் கேடெய்துமானால் அவ்வீட்டவர் புதுவீடு குடிபுகுந்து பீடுற வாழ்வதும் இதற்கொப்பாகும். பெருமைமிக்க நந்தியின் பேரருட்டன்மையினை அறியம் மெய்யுணர்வினர்க்கு இத் தன்மை எளிதின் விளங்கும்.

(அ. சி.) நமர் - நாட்டில் வாழும் நம்மவர்.

(6)


14. சிவதரிசனம்
(சிவக் காட்சி)

2809. சிந்தைய தென்னச் சிவனென்ன வேறில்லை
சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படுஞ்
சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
சிந்தையி னுள்ளே சிவனிருந் 2தானன்றே.

(ப. இ.) அரசனைத் தாங்கும் அரசு கட்டில் அரசனெனவே மதிக்கப்படும். அதுபோல் கொற்றந்தரும் முரசுகட்டில் கொற்றவை எனவே மதிக்கப்படும். இம்முறையே சிவபெருமான் எழுந்தருளியுள்ள சிந்தை சிவனெனவே மதிக்கப்படும். அக்குறிப்புத் தோன்றச் 'சிந்தைய தென்னச் சிவனென்ன வேறில்லை,' என ஓதினர். பாற்கலமும் பால் போல் மதிக்கப்படும். மேலும் உயிருள்ள உடலும் உயிர்போன்றே


1. கண்ட. சிவஞானபோதம், 2. 3 - 1.

" பூவையாய்த். அப்பர், 4. 5 - 8.

2. கேட்டலுடன். சிவஞானசித்தியார், 8. 2 - 14.

" புத்தன். 8. திருத்தோணோக்கம், 6.

" மாசற. புறநானூறு, 50.