தருங் கிளியாகவும் துன்பந்தரும் பருந்தாகவும் உருவகித்தனர். மேலும் கிளியைக்கண்டு மகிழ்கின்றோம். பருந்தைக் கண்டு நடுங்கின்றோம். பறைகொட்ட என்பது பலரறியக் கொடுப்பதெனவும், மலந்தேயக் கொடுப்பதெனவும் பொருள்படும். எனவே துன்பமும் இன்பமும் மலந்தேயக் கொடுக்கப்படுவன. அவற்றை நுகர்விப்பதன் பொருட்டு எண்ணம், மனம், எழுச்சி, இறப்புகளாகிய உட்கரணங்கள் ஆருயிர்களுடன் திருந்தப்பொருந்தின. இதனைத் திருந்திய மாதர் திருமணம் பட்டார் (2868) என்றனர். முதற்கண் தோன்றும் எண்ணம் பூதம் எனப்பட்டது. எண்ணமென்றாலும், நாட்டமென்றாலும், சித்தமென்றாலும் ஒன்றே. அவ் வெண்ணம் சிவத்தைப் பேணுதலாகிய தவத்தான் நன்மை எய்தும். அது கைகூடவே பெறதற்கரிய திருவடிப் பேற்றின் இன்ப வுரு வெளிப்பட்டிருக்கும். அதுவே திருந்திய பேறெனப்பட்டது. அப் பேற்றின்கண் இருந்து இன்புறுவா ரென்க. 'ஊண்பேறாம் பிள்ளை உறுபுணர்வாம் நாச்சுவையும், காண்பரறிவோர்மணத்தாற் காண' என்பதனை நினைவு கூர்க. (அ. சி.) பருந்தும் கிளியும் - அறமும் மறமும். படுபறை கொட்ட சுகதுக்கங்களை உண்டாக்க. மாதர் - மனம் முதலிய உட்கரணங்கள் திருமணப்பட்டார் - ஒருமை அடைந்தோர். பெருந்தவப்பூதம் பெறல் - பெருந்தவத்தினைச் சித்தம் அடைதலால். உருவாகும் இருந்திய பேறு - உண்டாகும் முதிப்பேறு. (31) 2857. கூடும் பறவை இரைகொத்தி மற்றதன் ஊடுபுக் குண்டி யறுக்குறில் என்னொக்குஞ் சூடெறி நெய்யுண்டு மைகான் றிடுகின்ற பாடறி வார்க்குப் பயனெளி 1தாகுமே. (ப. இ.) ஆருயிரின் உடம்பகத்து திடம்படவிருக்கும் மெய், வாய், கண், மூக்குச், செவியென்னும் அறிதற்கருவி ஐந்தும் கூடும் பறவை (1987) என உருவகிக்கப்பட்டன. இக் கருவிகள் முறையே தத்தமக்குரிய ஊறு, சுவையொளி, நாற்றம், ஓசை என்னும் புலப் பொருள்களுடன் கூடும். கூடி நுகர்ந்து கொண்டிருக்கும். அதனையே இரை கொத்தி என்றனர். கொத்தி என்பதன்பின் இருக்கும் என்னும் ஒரு சொல் சொல்லெச்சமாக வந்து பொருந்திற்று. திருவருள் வலத்தால் ஆருயிர் அதனூடு புகுந்து உண்டியாகிய அந் நுகர்வினை அறத்தல் வேண்டும். அங்ஙனம் அறுத்தால் கைகூடுவது என்னெனில் கூறுதும். சூடாகிய மெய்யுணர்வுத் தழலால் எறிதலாகிய நெய் திருவடிப் பேரின்பமாகும். அவ் வழியா வின்பத்தினை நுகர்தல் வேண்டும். நுகர்வார்க்கு மைபோலும் அறியாமையைக் கக்கும் புல்லுமலமாகிய இருளையொழிக்கும் தன்மை ஏற்படும். அங்ஙனம் அம்மலம் ஒழிக்கப்படவே திருவடிப்பேறு எளிதாகக் கைகூடும். அறுத்தல் - கொள்ளாது தள்ளுதல். (அ. சி.) பறவை - இந்திரியம். இரை - சுவை முதுலிய ஐந்து. அதனூடுபுக்கு - அவ் விந்திரியவழிச் சென்று. உண்டி அறுக்குறில் - சுவை முதுலிய விஷயாதிகளை நீக்கில். என்னொக்கும் என்ன கிடைக்கும். சூடு ஏறி - தவத்தால் உண்டாகும். நெய் - சிவானந்தம். மை கான்றிடும் - அவிச்சையை ஒழிக்கின்ற. பாடு - தன்மை. (32)
1. இந்திரிய. 8. கண்டபத்து, 1. " பருகிப். சீவக, 1368.
|