793
 

(ப. இ.) சிவபெருமான் தூமாயையை நிலைக்களமாகக்கொண்டு திருவருளின்கண் திருமேனிகொண்டருள்வன். இது சிவனடியார் திருநீற்றுத் திருமேனியுடன் திருக்கோயிலின்கண் சிவபெருமான் திருமுன் வீற்றிருப்பதை ஒருபுடையொக்கும். திருக்கோயில் தூமாயையாகவும், திருவெண்ணீறு திருவருளாகவும், உடம்பு சிவபெருமானாகவும் ஒப்பமைத்துக்கொள்க. இக் குறிப்பே 'அந்த வுடம்பு தன்னுடனே அரனார் மகனார் ஆயினார்'1 எனவும், 'ஊனுடம்பு வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே' எனவும் கூறிப் போந்த திருமுறைத் திருவருண்மொழிகளால்' பெறப்படும் பேருண்மையும் ஆகும். சிவபெருமான் கொண்டருளும் அருள் திருமேனியைச் சகளம் என்பர். சகளம் - நிலைக்களம்; சிவக்கொழுந்து. அச் சிவக்கொழுந்தினிடத்து அன்புடையார் நெஞ்சம் தங்கி இன்புறுகின்றது. அதற்கு இடையூறாகப் புறப்பொருளில் ஈர்த்துத் தீரா, இடையூறிழைக்கும் ஐம்புல அரிப்பினை யாரும் உணரார். எள்ளி நகையாடுதற்குரிய சில பல சிரிப்புமொழிகளைப் பேசி யாவதென்? உறுதியாக நின்று நம்மைப் பிறவித் துயருட்படுத்துவது மேகம் சூழ்ந்த கருவரையனைய ஆணவ வல்லிருளேயாம் என்க. அரித்தல் - துன்புறுத்தல்.

(12)

2005. கைவிட லாவதொன் றில்லை கருத்தினுள்
எய்தி யவனை யிசையினால் 2ஏத்துமின்
ஐவ ருடைய அவாவினில் தோன்றிய
பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே.3

(ப. இ.) மேலோதியவாறு ஆணவ வல்லிருளுக்கு அஞ்சிச் சிவவழிபாட்டைக் கைவிடுவதால் ஆவதொன்றில்லை. ஆணவ வல்லிருளை வெல்லுவதே சிவராத்திரிச் சிவவழிபாடாகும். உள்ளத்துள்ளே உறைந்து உணர்வினில் ஒளிர்ந்து உடம்பெல்லாம் விளங்கும் சிவபெருமானைத் திருமுறைத் திருப்பண்ணால் வழிபடுங்கள். இசையினால் என்பதற்கு இசைமை இசை என நிற்பதாகலின் செந்தமிழ்த் திருமுறையே சிவபெருமான் திருவடியில் ஆருயிர்களை இசைவிக்கும் அருமறை எனக் கூறுதலும் ஒன்று. அது, "வீடும் ஞானமும் செந்தமிழ் தரும்" என்பதனால் விளங்கும். ஐம்புல ஆசையினால் தோன்றிய நிலைபேறில்லாத மலையாட்டை ஒக்கும். அப் புலன்கள் பற்றும் பொருள்களும் நிலைபேறில்லன. அவையும் புலன்கள் என்றே சொல்லப்படும். அப் புலன்களும் ஐந்தேயாம். அவை, சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் (1987) என்னும் ஐந்துமேயாம்.

(அ. சி.) இசை - பண். பொய் வருடைய - அறியாமைமிக்குள்ள மலையாட்டை ஒத்த.

(13)


1. வந்து மிகைசெய். 12. சண்டேசுரர்.

2. வீடும் ஞானமும். சம்பந்தர், 2. 2 - 11.

3. பொறிவாயில். திருக்குறள், 6.