1208
 

யும், தண்டு என்று சொல்லப்படும் புல்லாங்குழலொலியும் உள்ளன. இவ்விரண்டும் ஒன்றுகூடி இசையொத்து முரல் உயிர்ப்பானது நிலைபெற்ற பொருளாதலின் தாணு எனப்பட்டது. அவ் வுயிர்ப்புப் பயில்வார்க்கு வயமாகப் பொருந்தித் தடுத்தலாகிய கும்பகத்தைச் செய்ய வாய்த்தது. வாணிகமாகிய புலனுகர்வு விரைந்து வந்து அதனைக் கெடுத்தற் பொருட்டுச் சேருவதற்கு முன்னர், யாவற்றையும் ஒரு காலத்து ஓரிடத்திருந்து ஒருங்கு அறியும் காட்சி யோகக் காட்சி. அத்தகைய யோகக் காட்சியால் எல்லாவற்றையும் இருந்த இடத்திருந்தே காணுவதாகிய அறியும் தன்மை உண்டாம். அவ் வறியும் தன்மையும் அவ் வுயிர்ப்புப் பயிற்சியின் கண்ணே வந்து கலந்து கொள்ளும் முறைமையுண்டாகும். ஆங்கு - அவ் வுயிர்ப்புப் பயிற்சியில். யோகக் காட்சி நீருள் மூழ்கினான் நிலையினை ஒக்கும். நீருள் மூழ்கினானுக்கு நீரால் நனையப்படாத இடம் உடம்பில் ஒன்றும் இன்றல்லவா? அதுபோல் யோகக் காட்சியினர் எல்லாப் பொருள்களையும் ஓரிடத்தே இருந்து காண்பர். இஃது அவர்தம் அறிவு சிவனையே நோக்குவதால் அவர்களுடைய அறிவுக் காட்சிக்குக் கருவியாக இருப்பது சிவனுடைய எங்கு நிறைந்த மங்கா அறிவு. அதனால் எங்கு நிறைந்த பொருள்கள் எல்லாவற்றையும் அறிதல் கூடும். நீருள் பரட்டளவு நின்றார், முட்டுக்காலளவு நின்றார், இடுப்பளவு நின்றார் அவ்வவ் வெல்லை வரையுமே நீரின் நனைவினைப் பெற்றிருப்பர். அதுபோல் ஆருயிரும் கண் முதலிய புலனால், இறுப்புமெய்யாகிய புத்தியினால், உணர்வு மெய்யாகிய உழைப்பு உணர்வு உவப்பு (அராகம்) என்னும் கருவிகளால் அறியும் அறிவு அவ் வவ்வெல்லை வரையுமே அறியும்.

(அ. சி.) வீணை - யாழ். தண்டு - புல்லாங்குழல். தாணு - சிவம். தகுதலை - இன்பத்தை. வாணிபம் - இந்திரியச் சேட்டை. காணி - முத்தி உலகம்.

(63)

2889. கொங்குபுக் காரொடு வாணிபஞ் செய்தது
அங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லை
திங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர்
தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமன்றே.1

(ப. இ.) புலப்பசையாகிய விசயவாசனையில் வெளிவந்து மனம் புகுவரே வாணிகம் செய்வதென்பதாம் கொங்கு, மணம் என்னும் பொருளையும் உடையது. மணம், அடங்கிய மனத்தைப் புறத்து ஈர்ப்பது. அதனால் ஆருயிரின் அறிவு புறத்துவர வாயிலாக இருப்பவர் சிறப்பிலாச் சிறியோராவர் அவர் தம் சேர்க்கையினையே கொங்கு என்றனர். இச் சிறியாருடன் பயின்று சிறப்பிலாத் தொழிலை, பிறப்புலாந் தொழிலைப் புரிகின்றோ மென்னும் எண்ணம் இவரைவிட்டு நீங்கிச் சிறப்புளார்பால் சேர்ந்து செயலற்றிருக்குமிடத்தே புலனாவதாகும். அதுபோல் அங்கென்று சொல்லப்படும் செயலறும் இடமாகிய நன்னிலத்துப் போனாலல்லாமல் சிறப்பில்லாத் தொழில் புலனாகமாட்டாது. நன்னிலம் தூரியநலம். நிலவு வெளிப்பட்டால் இருளையறிய முடியாதல்லவா? அதுபோல் நன்னிலமாகிய தூரியம் புகுந்தாரும் புலப் பொருள்களை யறியார். புலப்பொருள் கண் முதலிய பொறிகட்குப் புலனாகும் பொருள். தங்குமிடமாகிய நன்னிலம் சில அகத்தவத்தோர் - தாபதர் புகுந்தனர்.


1. ஒளிக்கும். கொடிக்கவி, 1.