149
 

326. கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே.1

(ப. இ.) நான்முகன் மகனாகிய தக்கன் என்னும் வானவன் சிவனைப் புறக்கணித்துச் செத்துப் பிறக்கும் திருமாலுக்கு முதன்மை ஈந்து வேள்வி செய்தனன். முதன்மையை மறுத்தலாகிய கொலைக்குற்றம் செய்த பிரசாபதியாகிய தக்கனைச் சிவனடியார்கள் சினந்தனர். அச் சினம் வாயிலாகச் சிவபெருமான் மற ஆற்றலால் அவன் தலையினைத் தடிந்தருளினன். அத் தலையினை அவன் வளர்த்த தீயினில் இட்டருளினன். பின்பு ஏனையாரும் இங்ஙனம் மருளாதிருத்தற் பொருட்டும், வேள்வியிற் கொல்லப்படும் விலங்கினங்களாக வேள்வி செய்வோர் பிறந்து கொல்லப்படுவர் என்பதை அறிவுறுத்தும் பொருட்டும் அத் தக்கன் உடலில் ஆட்டுத் தலையினைப் பொருத்தியருளினன்.

(அ. சி.) பிரசாபதி - தக்கன். சந்தி செய்தான் - பொறுக்கிறான்.

(2)

327. எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியுந்
தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்(கு)அச் சுதனை உதிரங்கொண் டானே.2

(ப. இ.) சிவபெருமான் திருவடி எங்கும் நிறைந்து பெரிய உலகங்களையும் நிலைபெறச் செய்தலாகிய தாங்குதலைச் செய்து நீக்கமற நிற்குந் தன்மைத்து. அதனையுணரும் சிவவுலகத் தேவர்கள் நான்முகன் கல்விச் செருக்கினைக் கண்டு சினங் கொண்டனர். அவர்தம் சினத்துக்கு உள்ளாகிய அயன் தலையை வைரவக் கடவுளால் அறுப்பித்தனன் சிவன் அதுபோல் செல்வச் செருக்குக் கொண்ட அயன் தந்தையாகிய அச்சுதன் எனப்படும் அரியின் குருதியினை அத்தலையில் ஏற்கச் செய்தனன்.

(3)

328. எங்கும் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை யோதிபாற்
பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித் தாழிசெய் தானே.3

(ப. இ.) சிவபெருமான் எல்லா இடங்களினும் எல்லா உயிர்களினும் கலப்பால் ஒன்றாய்க் கலந்தும் இருக்கின்றனன். என் உள்ளத்திலும் எழுந்தருளி யிருக்கின்றனன். அவன் அறுசமயங்களாகிய அங்கங்கட்கு முதல்வனாவன். நான்கு மறைகளை ஓதியருளிய நாதனாவன்.


1. தக்கனையும.் 8. திருச்சாழல் 5.

2. ஆமயந்தீர்த். அப்பர், 6. 96 - 1.

3. தடமல. "4. 14 - 10.

" நெருப்புருவு. "6. 90. - 9.