409. பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும் உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங் குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசம் விதஞ்செய்யும் நெஞ்சில் வியப்பில்லை1 தானே. (ப. இ.) ஆருயிர்கள் பிறப்பற்றுச் சிறப்புற்று என்றும் ஒருபடித் தாய் வாழ்தற்குத் துணை செய்யும் இந் நிலவுலகம் பதஞ் செய் பார் எனப்பட்டது. பதம் - இனிய செவ்வி. அத்தகைய இவ்வுலகும் குளிர்ந்த மேகங்கள் தங்கும் பெருமலைகள் எட்டும், ஓசைசேர் ஏழ்கடலும், இவை முதலாம் பிறவும் திருவருள் இயக்கத்தால் தோன்றுவனவாகும். இவற்றைக் காணுந்தோறும், கேட்குந்தோறும், கேட்பிக்குந்தோறும், கேண்மையுறுந்தோறும், நுகருந்தோறும் அளவிலா மகிழ்ச்சி அனைத்துயிர்க்கும் இனைத்தெனக் கூறவொண்ணாதவாறு என்றும் மிகுகின்றது. இவற்றைப் பேரொடுக்கக் காலத்துப் பெரும் பொருட் கிளவியானாகிய சிவபெருமான் சிவஞான அனல் கொளுவி ஒடுக்கின்றனன். அவ்வொடுக்கம் ஆகாச விதஞ்செய்வதாகும். அஃதாவது, உய்த்துணர்வார்க்கு உள்ளதாய்க் கட்புலனாகாததாய் இருப்பதாகும். அதுபோல், மாயகாரியமாகிய உலகம் தன் காரணமாகிய மாயையில் உள்ளதாய் ஒடுங்கித் தோற்ற மில்லதாய் இருக்கும் திருவருளால் இவ்வுண்மை உணரலாகும். அங்ஙனம் உணர்ந்தார் நெஞ்சில் உலக வியப்பு எஞ்ஞான்றும் உறுவதில்லை. உதம் செய்யும் - உதயம் செய்யும்; உதயம் என்பதன் கடைக்குறை. பார் - உலகம். பனி - குளிர்ந்த மேகம். அங்கி - தீ. (அ. சி.) பதம் செய்யும் பார் - ஆன்மாக்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும் உலகம். முதம் - மகிழ்ச்சி. குதம் - மிகுதி. ஆகாசவிதம் - தோற்றாதபடி. (3) 410. கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகி ஒன்றின் பதஞ்செய்த ஓம்என்ற அப்புறக் குண்டத்தின் மேல்அங்கி2 கோலிக்கொண் டானே. (ப. இ.) திருவருளால் இயக்கப்படும் கொண்டலாகிய மழை திருவருளென்றே கூறப்படும். அம்மழை குலக்கொடி யென்றும் உருவகிக்கப்படும். ஒன்றா உயர்ந்த பெருமலையினின்று ஆருயிர் உய்ய அருவியாக வழிந்தோடிய பெருமழை அண்டத்துள் நிரம்பிற்று. மீண்டும் அண்டத்துள் நின்று ஊற்றெடுத்தது. பெரிய தெளிந்த திரையையுடைய கடலாய், யாறாய், பிற நீர்நிலைகளாய்ப் பொருந்திற்று. பொருந்தி எல்லாப் பொருள்களையும் யாவர்க்கும் பயன்படுமாறு இனிய செவ்வி
1. இருநிலனது. சம்பந்தர், 1. 22 - 7. " கத்து. அப்பர், 5. 38 - 5. " வான்கெட்டு 8. திருத்தெள்ளேணம், 18. " சுவையொளி. திருக்குறள், 27. 2. மண்கடின. உண்மை விளக்கம், 10.
|