109
 

கொள்ளும் இன்பம் சுனை நீரில் காணும் சுழியிற்பட்டுத் துன்புற்று ஆழ்வதுபோல் பிறப்பிற்பட்டுத் துன்புற்று ஆழ்வதற்கு வழியாகும். அப் பொய்ம்மை மாதர் காட்டும் பொய்யான கசிந்தெழுவது போன்று தோன்றும் அன்பு அப்பொழுதே கனவுபோல் நிலையாதழியும். நனவில் நினைத்தாலும் பெரும் துன்பந்தருவதாகும்.

(2)

249. இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயனுறப் புல்லிப் புணர்ந்தவர் எய்தும்
மயலுறும் வானவர் சார்விது என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே.1

(ப. இ.) சாயலும் அழகும் அமைந்த பெண்யானையை ஒத்த இளம் பெண்கள் மேகம் பொழியும் மழைபோல் உடலும் உயிரும் தளிர்ப்பத் தழுவிப் புணர்ந்தவரானாலும் அவர்மனம் பொருளின் பாலே செல்லும். புதுப் பொருளுடையாரைக் காணின் அவர் எல்லாவகையாலும் தாழ்ந்தோராயினும் வானவரே யென்று சொல்லித் தம் பெருமயலில் ஆழ்த்துவர். அவர் சார்பே எய்தற்கரிய தெனவுங்கூறுவர். பொருளற்றால் அவரை விலகும்படி கடுமையாகப் பேசியும் துன்புறுத்தியும் ஓட்டுவர்.

(அ. சி.) இயல் - அழகு.

(3)

250. வையகத் தேமட வாரொடுங் கூடியென்
மெய்யகத் தோருளம் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெறு வேம்பது வாமே.

(ப. இ.) வழித்துணையாகாமல் பழித்துணையாம் பெண்களைக் கூடுவதால் உண்டாகும் பயன் ஏதும் இல்லை. அதனால் மெய்யுணர்ந்தோருள்ளம் வெருவும். அப் பெண்கள் பொருளுடையார் பாலுள்ள கரும்பின் சாறனைய பொருள்களை அவர்கள் விரும்பி வலியக் கொடுத்து வணங்குமாறு செய்வர். அம்மட்டோ? மேலும் அப் பொருளுடையாரைப் பொருளற்ற காலத்துப் புறக்கணிப்பர். பொருளுடையார் மனம் வேம்பனைய கசப்பாகிய வெறுப்பினை எய்தும்படி நடப்பர். அவர்தம் புன்மை புறத்தும் காணப்படும் வடுப்போல் உடம்பெல்லாம் அருவருக்கத் தகுந்த தொழுநோய் முதலியன கொள்ளவும் வைப்பர்.

(அ. சி.) மெய்யகத்தோர் - உண்மை உணர்ந்தோர்.

(4)

251. கோழை ஒழுக்கங் குளமூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே.

(ப. இ.) முறையாக மணந்து நாட்டுக்கும் வீட்டுக்கும் மொழிக்கும், நன்னெறிக்கும் துணைபுரியத்தக்க நன்மக்களைப் பெறுவதே


1. பஞ்சின். 12. தடுத்தாட்கொண்ட, 159.

" பெண்ணெனப். சீவகசிந்தாமணி, 1597.