435
 

(அ. சி.) ஆதி வயிரவி - சக்கரத்துடன் கூடிய வயிரவி மந்திரத்தை, கன்னித்துறை - விசுத்தி. உடல் உயிர் ஈசனாம் - உடலில் உள்ள உயிர் ஈசனது தன்மையை அடையும். உலவாத கோலம் - அழிவற்ற தேகம்.

(25)

1076 .கோலக் குழலி குலாய புருவத்தள்
நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன்னமு தானந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.

(ப. இ.) அழகிய கூந்தலையும் புருவத்தையும் உடையவள். குவளை மலரையொத்த கண்ணையுடையவள். நீங்கா மகிழ்ச்சியைத் தருகின்ற பேரழகினள். சிவபெருமான் எல்லாங் கடந்தவர். நாமுய்யும் பொருட்டுத் தடையிலா ஞானமாகிய அம்மையை உருவாகக்கொண்டு எழுந்தருளுவர். அதனால் அவரை வெளிப்படுத்தியது திருவருளாற்றல் என்பர்.

(அ. சி.) ஆலிக்கும் - மகிழ்ச்சி பயக்கின்ற. சிவத்தை வெளிப்படுத்தாள் - அருவமாயுள்ள சிவத்தின் தன்மையை உணரும்படி செய்வள்.

(26)

1077 .வெளிப்படு வித்து விளைவறி வித்துத்
தெளிப்படு வித்தென் சிந்தையி னுள்ளே
களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி
ஒளிப்படு வித்தென்னை உய்யக்கொண் டாளே.

(ப. இ.) ஊழ்வினைப்பயன் உண்மையினை நடப்பாற்றலாக நின்று வெளிப்படுவித்து, அதன் விளைவாக ஏறுவினைத்தொடர்ச்சியை அறிவித்து, அடிமை என்னும் நாட்டத்தால் முயலின் ஏறு வினைத்தொடர்பு இன்றென்பதையும் தெளியப்படுத்தி, உய்விப்பள்: தெளியப்படுத்துங்கால் நடப்பாற்றல் வனப்பாற்றலாம் நிலை எய்தும். அதனால் திருவடியுணர்வு கைவரும். அதனால் திருவடிப் பேறெய்தும் சிவப்பேரொளியை மிகவும் விளக்குவித்து என்னை உய்யக்கொண்டருளினள். தெளியப்படுத்தி என்பது தெளிப்படுத்தி எனக் குறைந்து நின்றது.

(அ. சி.) விளைவு - பயன். களிப்படுவித்து - களிப்பைச் செய்து. கதிர்ப்படு சோதி - பரையாகிய இரணங்களைக் கொண்ட சிவசோதியை. ஒளிப்படுவித்து - உயிர் தரிசிக்கும்படி செய்து.

(27)

1078 .கொண்டனள் கோலங் கோடி அநேகங்கள்
கண்டனள் எண்ணெண் கலையின்கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையுந்
தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.

(ப. இ.) உலகுய்தற்பொருட்டு அருளம்மையார் கொண்டருளிய திருக்கோலத் திருவுருவங்கள் பலகோடி என்பர். அறுபத்து நாலு கலைகளையும் தோற்றுவித்தனள். அவற்றுள் வெளிப்பட்ட நூற்சுவடி வரிசைகளையும் வெளிப்படுத்துவித்தனள். அதுபோல் ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்று ஒளியுடைய பொருள்களையும் படைத்தருளினள்.