6. கிரியை (நோன்பு) 1424. பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண் டெத்திக் கிலரில்லை என்பதின் அமலர்க்கு ஒத்துத் திருவடி நீழல் சரணெனத் தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.1 (ப. இ.) பத்துத் திக்குகளிலும் ஒப்பில்லாத முழுமுதற்சிவன் ஒருவனுளன். அவன் இல்லாத திக்குகள் இல்லையென்று அருள் நூல்கள் கூறுகின்றன. அகத்தே கொல்லாமை முதலிய சிவனை எளிதாக எய்துவிக்கும் நற்பண்புகள் 'கொல்லாமை ஐந்தடக்கல் கொள்பொறுமையோடிரக்கம். நல்லறிவு மெய்தவம் அன்பெட்டு' அமையப் புறத்தே அவற்றிற்கு இனமாகிய நறுமலர்களைக்கொண்டு திருமுறைப்போற்றித் தொடர்புகன்று திருவடி நீழலே மாறாப் புகலிடமென்று அருச்சித்தல் வேண்டும். அங்ஙனம் அருச்சிப்பார்க்கு ஏறுவினையாகிய ஆகாமியம் உணக்கிலாவித்து ஒரு ஞான்றும் விளையாமைபோல் சாராது என்க. (அ. சி.) எத்திக்கிலர் இல்லை - தெய்வம் பலவியில்லாத திக்கு இல்லை. தத்தும் - ஏறும். (1) 1425. கானுறு கோடி கடிகமழ் சந்தனம் வானுறு மாமல ரிட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உண்பவர்க் கல்லது தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.2 (ப. இ.) மண்ணும் விண்ணும் ஆகிய எங்கணும் நறுமணம் கமழும் சந்தனமும், அத்தகைய சிறந்த மணம் கமழும் நறுமலரும் கைக்கொண்டு நாளும் வழிபட்டாலும் தம்மை அடிமை என்று கொண்டு கொல்லாமலும் கொன்றதைத் தின்னாமலும் இருப்பதாகிய செந்நெறியொழுகிச் சிவனை நினைப்பதாகிய திருவுடையார்க்கன்றி திருவருள் வீழ்ச்சியாகிய சத்திநிபாதம் கிட்டாது. சத்தி - திருவருள். நிபாதம் - நன்றாய்ப் பதிதல்; வீழ்ச்சி. (அ. சி.) கோடி-எல்லை. வான் உறு-பெருமை பொருந்திய. ஊனினை நீக்கி - சரீர அபிமானம் விட்டு அல்லது மாமிச உணவை விட்டு. (2) 1426. கோனக்கன் றாயே குரைகழல் ஏத்துமின் ஞானக்கன் றாகிய நடுவே யுழிதரும் வானக்கன் றாகிய வானவர் கைதொழும் மானக்கன் றீசன் அருள்வள்ள மாமே.3
1. எல்லையில். சிவப்பிரகாசம், 10 - 10. " பிணக்கி. 8, திருக்கழுக்குன்றம், 1. 2. கொல்லா. தாயுமானவர், பராபரக்கண்ணி, 192. " கொல்லான். திருக்குறள், 260. " கொல்லா."984. 3. அக்கு. அப்பர், 5. 97 - 14.
|