667
 

1697. உலந்திலர் பின்னும் உளதௌ நிற்பர்
நிலந்தரு நீர்தெளி யூனவை செய்யப்
புலந்தரு பூதங்கள் ஐந்தும்ஒன் றாக
வலந்தரு தேவரை வந்திசெய் யீரே.

(ப. இ.) இறந்தவர் இறந்தே போனார் என்பதற்கிடனின்றி வினைக் கீடாக மீண்டும் பிறக்கின்றனர். அவர்கள் உடம்பு தோற்றமுறையில் நீரினின்று நிலம் தோன்றும் என்பதாகக் குறிக்கவே ஐம்பூதச் சேர்க்கையால் ஆகியது என்பது விளங்கும். இப் பிறப்பினை வெல்வது சிவபெருமான் திருவடி வணக்கத்தாலாகும்.

(அ. சி.) நிலந்தரு நீர் - நிலம் உற்பத்திக்குக் காரணமான நீர். தெளியூன் - காணப்பட்ட தூல உடல். புலந்தரு - அறியப்படுகின்ற. வலந்தரு - பிறப்பிறப்பை வெற்றிகொள்ளுமாறு வல்லமை தருகின்ற.

(2)

1698. கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்1
வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்
தாயில்கொண் டாற்போல் தலைவனென் னுட்புக
வாயில்கொண் டீசனு மாளவந் தானே.

(ப. இ.) ஆருயிர்களின் உடம்பகத்து உறுப்புகளை இயக்கும் கொருட்டுத் தொன்மையிலேயே அருளோன், ஆண்டான், அரன், அரி, அயன் என்னும் ஐவரும் குடிகொள்கின்றனர். உடம்பினை இடமாகக் கொண்டு செலுத்துகின்றனர். கன்றை நினைந்து ஆ மனைபுகுவது போன்று, சிவபெருமான் அடியவாகளுக்கு அருள்புரிதல் வேண்டி அவர்கள் செய்யும் பேரன்புக்கீடாகச் சிவமாக்கி ஆண்டருள்வன்.

(அ. சி.) கோயில்கொண்ட அன்றே - சரீரம் எடுத்தபோதே. ஐவர் - ஐந்து கர்த்தர், ஐம்மூர்த்திகள். வாயில் கொண்டு சரீரத்தை வழியாகக்கொண்டு. வழிநின்று - சரீரத்தில் இருந்து கொண்டே. தாய் இல் கொண்டால்போல் - கன்றினையூட்டத் தாய்ப் பசு இல்லாம் நோக்கிச் சொல்வதுபோல. வாயில்கொண்டு அன்பினை வழியாகக்கொண்டு.

(3)

1699. கோயில்கொண் டானடி கொல்லைப் பெருமறை
வாயல்கொண் டானடி நாடிகள் பத்துள
பூசைகொண் டான்புல னைந்தும் பிறகிட்டு
வாயில்கொண் டானெங்கள் மாநந்தி தானே.

(ப. இ.) மக்கள் யாக்கையினைத் திருக்கோவிலாகக்கொண்டு எழுந்தருளினன் சிவன். மிகுதியான மறைநூற்களைத் தன்னை யாடையும் வழிகாட்டியாகக் கொண்டான். திருவடி சேர்வார் நாடிகள் பத்தினையும் தூய்மை செய்தல் வேண்டும். புலனைந்தும் தம் பின்வரச் சிவனை வழிபடுதல் வேண்டும். அவ்வாறு வழிபடும்போது சிவன் நாடிகளையும் இடமாகக்கொண்டு அருள்புரிவன்.


1. எண்ணில. சிவஞானபோதம், 4. 1 - 4.