யாகிய நிலத்துடனும், வானத்துடனும் நீக்கமற விரவி நின்றருள்பவன் சிவன். அத்தகைய நிலைபெற்றுயர்ந்த சிவபெருமானை இடத்தாலும், காலத்தாலும், படிமத்தாலும் ஓர் எல்லைப்படுத்து அளவிட்டுரைத்து வலம் செய்து வழிபடுமாறு எவ்வாறு என்று உன்னின், அஃது உரைக்கவும் உன்னவும் ஒண்ணாததாகும். அக் குறிப்பே ஆறு அறியேனே என்பதாகும். படிமம் - திருவுருவம்; விக்கிரகம். (அ. சி.) குலைக்கின்ற - நிலையைக் குலைக்கின்ற, தளரச்செய்கின்ற. குவலயம் - மண், பூமி. வரைத்து - ஓர் அளவில் அமைத்து. (2) 2793. அங்குநின் றானயன் மால்முதல் தேவர்கள் எங்குநின் றாரும் இறைவனென் றேத்துவர் தங்கிநின் றான்தனி நாயகன் எம்மிறை பொங்கிநின் றான்புவ னாபதி 1தானன்றே. (ப. இ.) உம்பர் உலகத்துள்ள அயன் மால் அரன் முதலிய தேவர்களும், எங்கும் நிறைந்துள்ள யாவர்களும் உய்யுமாறு இறைவனே என்று பாடிப் பரவிப் பணிவார்கள். ஒப்பில் தனி நாயகனாகிய சிவபெருமான் எங்கணும் தங்கி நின்றருளினன். அவன் தனிப்பெரும் விளக்கமாய் இருநூற்றிருபத்து நான்கு புவனங்களென்று சிறப்பித்துச் சொல்லப்படும் உலகங்கட்கும் ஏனைய அண்டங்கட்கும் ஒரு முதலாய்த் திகழ்கின்றனன். (அ. சி.) பொங்கி-விளங்கி; புவனாபதி - அண்டங்களுக்கெல்லாம் அதிபதி. (3) 2794. சமையச் சுவடுந் தனையறி யாமற் கமையற்ற காமாதி காரணம் எட்டுந் திமிரச் செயலுந் தெளிவுடன் நின்றோர் அமரர்க் கதிபதி யாகிநிற் பாரே.2 (ப. இ.) நன்னெறித் திருவடையாளங்களையும் தன்னையும் சிறப்பாக அறிந்து முழுமுதலை வழிபட்டு அகவிழி பெற்று உய்யவேண்டுவது ஆருயிரின் கடமையாகும். அக் கடமையை வழுவுமாறு செய்து தடுக்குங் காரணங்கள் எட்டு. அவை முறையே செருக்கு, சினம், சிறுமை, இவறன்மை, மாண்பிறந்த மானம், மாணா உவகை, மண், பொன் என்பனவாகும். இவை பொறுமையை யிழப்பித்துச் சிறுமையுறச் செய்யும் தீமைகளாகும். இவற்றிற்கு அடிப்படைக் காரணமாக வுள்ளது ஆணவவல்லிருளாகும். அதுவே. திமிரம் எனப்படும். திருவருளால் இவையனைத்தையுங்கண்டு உண்மை யோர்ந்து தெளிந்து நிற்பர் மெய்யடியார். அவர்கள் நன்னெறிக்கு நற்றூணாவர். அவர்கள் உம்பர்வாழ் தேவர்கட்கும் முதல்வராவர். (அ. சி.) சுவடு - குறிகள். கமை - பொறுமை. காமாதி எட்டு - பெண்ணாசை, குரோதம், மதம், மோகம், உலோபம், மாச்சரியம், பொன்னாசை, மண்ணாசை ஆக 8.
1. இறைவ. அப்பர், 5. 38 - 4. 2. துடிகொள் நேர். 8. அருட்பத்து, 5.
|