சுத்த சாத்தம். இந்நெறி ஓரும் அறிவில் பொருள் ஓங்கும் அறிவுயிர், சாரும் அருள் மாறல் சாத்தம் என்பதனால் உலகமும் உயிரும் சத்தியின் திரிபெனக் கூறும். அச் சத்தியின்கண் ஒடுங்குவதே வீடுபேறென்ப. இக் கருத்துடையார் சித்தர். இந் நெறியினர் வாம மதத்தர் எனவும் அழைக்கப்படுவர். இவர்கள் சத்தி வழிபாட்டிற்குக் கள்ளினை மேற் கொள்வர். இவர்கள் மயக்கும் கள்ளினையுண்டு தியக்கமுறலால் தம்மை மறக்கின்றனர். மறக்கவே சத்தியழிகின்றது அஃதழியவே கருதிய சத்தி வழிபாடும் உடன் அழிகின்றது. இம் மயக்கும் கள்ளினையுமுண்ணாது சத்தியைச் சிவனுக்கு வேறாகவும் கருதாது சத்தியருளால் சிவஞானம் கைவரப் பெற்றவர், இயற்கை உண்மை அறிவு இன்ப உணர்வுறுவாம் திருவடிப் பேற்றில் சாரும் சிறப்பினை எய்துவர். சத்தியே சிவஞானம் என்றலும் ஒன்று. அது 'சத்தியின் வடிவே தென்னில் தடையிலா ஞானமாகும்' என்னும் தமிழாகமத்தா னுணர்க. (அ. சி.) சமயத்தோர் - வாம மதத்தார். (9) 320. சத்தன் அருள்தரிற் சத்தி அருளுண்டாஞ் சத்தி அருள்தரிற் சத்தன அருளுண்டாஞ்1 சத்தி சிவமாம் இரண்டுந்தன் னுள்வைக்கச் சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே. (ப. இ.) சத்தனை அத்தன் என்றும் சத்தியை அன்னையென்றும் அழைப்பர். அத்தன் அன்னையைத் தன்னுள் பேரொடுக்கப் பேரூழியில் ஒடுக்கிக் கொள்வன். பின்பு உலகத் தோற்றமாம் மார்கழித் திருவாதிரையின்போது அவ்வன்னை வெளிப்படுத்தப்படுவள். இதுவே சத்தன் அருள்தரில் சத்தி அருளுண்டாம் என்பது. சத்தி அருள் என்பது வனப்பாற்றல் அல்லது பரை எனப்படும். இவ் வனப்பாற்றலாகிய சத்தி சிறந்த அருளைத் தரும் அவ்வருள் நடப்பாற்றல் எனப்படும். நடப்பாற்றல் ஆருயிர்களை வினைக்கீடாக உலகு உடல்களுடன் கூட்டிச் செந்நெறிக் கண் செலுத்துவது. செலுத்திச் சிறப்பாம் திருவடிப் பேற்றினை எய்துவிக்க நடத்துவிப்பிது. அப்படி நடத்துவிப்பித்துகொண்டு சென்றால் சத்தன் அருளாகிய திருவடிப்பேறுண்டாகும். சத்தி சிவமாகிய இரண்டும் ஆருயிர்களை ஆற்றல் அன்பு அறிவுகளாகிய தம்முள் அடக்கிக்கொள்ளும். அதனால் முடிவிலா நிலைபேறாம் வாய்மையும் எண்குணப் பேறாகிய சித்தியும் எண்மையின் எய்தும் என்க. நடப்பாற்றல்: மறைப்பாற்றல்; திரோதான சத்தி. 'சிவயநம' வ: வனப்பாற்றல். ந: நடப்பாற்றல். சத்தி எனினும் ஆற்றல் எனினும் திருவருள் எனினும் ஒன்றே. அத்திருவருள் அனைத்துயிர்க்கும் அருளிப்பாட்டினைச் செய்ய வேண்டும் எனப் பொது வகையான் அறிந்தும் அறிவித்தும் நிற்கும்; அப்பொழுது அத்திருவருள் பேரறிவுப் பெருந்திரு எனப் பேசப்பெறும். இதுவே தடையிலாஞானம் எனப்படும். தடையின்மை தனித் தனி உயிர்கட்குச் செவ்வி வருவித்தற்பொருட்டு ஏதும் புரியாது எலலார்க்கும் அருள் புரிய வேண்டுமெனப் பொதுவகையால் திருவுள்ளங் கொள்ளுதல். இது, மருத்துவன் நோயாளிக்கு நோய் நீக்க வேண்டு மென வுள்ளங்கொள்ளுதலையும்
1. சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார், 2. 4 - 5. " மின்னிடைச். 8. திருப்பொற்சுண்ணம், 13. " தவளத்த 8. திருக்கோவையார், 112.
|