276
 

611. சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சாமதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.1

(ப. இ.) சமாதி - நிட்டை. பலயோகம் - பலதழுவல்: மந்திரத் தழுவல், பத்தித்தழுவல், ஞானத்தழுவல், கருமத்தழுவல் முதலியன. இறையுடன் ஏகில் - திருவடி நிறைவில் அடங்கில். தானவனாகில் - ஆவியும் முழுமுதற் சிவனருளால் சிவமாக்கப்பெற்ற நிலையில். சமாதியில் - நிட்டையின்றியே. எட்டெட்டுச்சித்தியும் - உவமையிலாக் கலைஞானம் அறுபத்துநான்கும். எய்தும் - திருவருளால் தாமே வந்து பொருந்தும்.

(அ. சி.) சமாதியில் எட்டும் எட்டுச் சித்தி - அணிமா முதலிய எட்டுச் சித்திகள்.

(14)


10. அட்டாங்கயோகப் பேறு
இயமம்
(தீ தகற்றல்)

612. போதுகந் தேறும் புரிசடை யானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடு
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.2

(ப. இ.) அம்மை உவப்ப ஐந்தொழிற் பெருங்கூத்தியற்றும் சிவபெருமான் ஆவியின் விழைவினை அறிந்து விரும்பியவாறு முடித்தருளுவன். அமராபதி - (அமர் + ஆ + பதி) அமரரை ஆளும் நிலையாம்.

(அ. சி.) அமராபதிக்கே செல்வர் - இயமம் முதலிய எட்டு யோகங்களில் சித்தி பெற்றவர் அமராபதியாகிய இந்திர உலகினை எய்துவர்.

(1)

நியமம்
(நன்றாற்றல்3)

613. பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதஞ் சேரலு மாமே.4


1. ஞாலமதில். சிவஞானசித்தியார், 8: 2 - 2.

2. ஓங்கொளியாய். சிவப்பிரகாசம், 2.

3. ஆதி. அப்பர், 5: 94 - 6.

4. இந்திரன். ஆரூரர், 7: 100 - 9.