302
 

(ப. இ.) மூலமுதற் சொல்லப்படும் ஆறு நிலைகளில் முறைப்படி உயிர்ப்பினை அமைத்தால் உணர்வின்பமாகிய அகச்சுவை தோன்றும். ஏழது... இறக்கிட - உயிர்ப்பினை ஓர் அளவுக்குட்படுத்தி உள்ளிழுத்து இழுத்ததற்கு இரண்டுமடங்கு உள்ளடக்கினால்; எட்டது...யேற்றபின் - அமிழ்த மண்டிலத்தைப் பொருந்தும்படியாக மேற்செலுத்தின், ஒன்பது...வாயுவே - ஒன்பான் ஆற்றல்களாகிய நவசத்திகளும் நின்றியக்கும் நிலைக்களத்தைப் பொருந்தும் உயிர்ப்பு என்க. மேலும் 675 முதல் இது முடிய வுள்ளனவும் இவை போல்வனவும் ஆசான் வாயிலாக ஆசறத்தெரிதல் அனைவர்க்கும் அமையும் நன்றென்ப.

(64)

684. சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்
சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச்
சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத்
துந்திச் சமாதி யுடையொளி யோகியே.

(ப. இ.) தானாம் சகமுகத்து - ஒற்றுமைநயத்தான் தானாகவே கருதும் உடலின்கண்ணும், அதற்கு வேண்டும் ஊண் உறையுள் முதலியவற்றிற்கு நிலைக்களனாம் உலகின் கண்ணும், உந்தி - (உள்ள பற்றை) நீக்கி மேல்நோக்கி. சமாதி....யோகியே - இறைநிறைவில் அடங்கி அதனால் விளங்கும் திருவருள் ஒளியுடையார் யோகியராவர்.

(அ. சி.) சந்திரன் சூரியன் - சந்திர கலை; சூரிய கலை. தாணுவின் சந்திரன் - பரம ஆகாயத்திலுள்ள பரமசிவத்துக்குரிய சந்திரன். சந்தியிலே கண்டு - சந்திக்கும்போது தரிசித்து.

(65)

685. அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல்
வணங்குற்ற கல்விமா ஞான மிகுத்தல்
சிணுங்குற்ற வாயர் சித்திதாங் கேட்டல்.
நுணங்கற் றிருத்தல்1கால் வேகத்து நுந்தலே.

(ப. இ.) இறைவன் நற்றாள் தொழுதற்காம் கல்வியும் அதனால் எய்தும் திருவடியுணர்வாம் பெரிய ஞானம் மிகுதிப்படுதலும், சிணுங்குற்...கேட்டல் - அருமறை பேசும் வாயினர்தம் சித்தியினைக் கேட்டலும், நுணங்...நுந்தலே - அசைவற்றிருத்தலும் உயிர்ப்பினை விரைந்து மேலேற்றுதலினாலாம் பயன்.

(அ. சி.) அணங்கற்றமாதல் - ஆசை ஒழிதல். சிணுங்குற்ற வாயர் -சித்தர்.

(66)

686. மரணஞ் சரைவிடல்2 வண்பர காயம்
இரணஞ்சேர் பூமி இறந்தோர்க் களித்தல்
அரணன் திருவுற வாதனமூ வேழாங்
கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே.

(ப. இ.) இறப்பினையும் முதுமையினையும் ஒழித்தல், தன்னுடம்பைத் தானே நீத்து ஆவிநீத்த வேறோர் உடம்பினுள் புகுதல், இரணம்..


1. (பாடம்) றிரோதல். 2. சிறைவிடல்.