மண்டலித்திருத்தலுமாம். இவற்றைத் தமிழ் வரிவடிவ அமைவே காட்டுவதாகவும், இவற்றை மறைமொழியாக வுணர்த்துவார் பாம்பு இரண்டு எட்டு என்றனர். தமிழ் இரண்டு: 2. எட்டு: 8. இயல்பாகவே உள்ளமைய வேண்டிய மூச்சுப் பன்னிரண்டங்குலம் என்ப. இடப்பால் வலப்பால் வழிச்செல்லும் மூச்சை அடக்கின் உடலழியாது. (அ. சி.) மூன்று மடங்கு - இரேசகம், பூரகம், கும்பகம், பாம்பிரண்டெட்டு - உகார அகர வடிவான. உச்சுவாசம் - நிச்சுவாசம். இயந்திரம் - பிராணவாயு. முட்டை யிரண்டு - இடகலை பிங்கலை. (5) 709. நூறும் அறுபதும் ஆறும் வலம்வர நூறும் அறுபதும் ஆறும் இடம்வர நூறும் அறுபதும் ஆறும் எதிரிட நூறும் அறுபதும் ஆறும் புகுவரே.
(ப. இ.) உயிர்ப்பு நூற்றறுபது மாத்திரை இடமூக்கு வலமூக்கு வழியாக உள்ளிழுக்க. ஆறு - ஆறுநிலைகள்; (ஆறாதாரம்) - இவற்றின் வழியாக உயிர்ப்பு உள்ளமைதல். நூறும்...எதிரிட - நடுநாடி வழியாக உயிர்ப்பு மேனோக்கிச் செல்ல. எதிரிட - மேனோக்கிச் செல்ல. நூறும்...புகுவரே - வரையறுக்கப்பட்ட நூறாண்டினையும் மாறும்படி நீண்டநாள் எய்துவர். (6) 710. சத்தியார் கோயி லிடம்வலஞ் சாதித்தான் மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாம் தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படும் சத்தியஞ் சொன்னோஞ் சதாநந்தி ஆணையே. (ப. இ.) திருவருளாற்றல் உறைந்திருக்கும் உடம்பாகிய கோயிலில் உயிர்ப்பினை வலமூக்கின் வழி நிறுத்தினால்; மத்தி...கேட்கலாம் புருவ நடுவில் பரவெளி ஒலி (நாதம்)யினைக் கேட்கலாம். மத்தியத்தானம்; மத்தியானமென்றாயிற்று. வாத்தியம் - நாதம். தித்தித்...வெளிப்படும் - தித்தித்தா என இசைக்கப்பெறும் தாளத்துக்கேற்பத் திருக்கூத்தியற்றும் சிவனும் வெளிப்படுவன்; சத்தியம்....ஆணையே - ஆண்டவன் அருளாணைவழி உண்மை கூறினோம் என்க. (அ. சி.) சத்தியார் கோவில் - தேகம். (7) 711. திறத்திறம் விந்து திகழு மகார முறப்பெற வேநினைந் தோதுஞ் சகார மறிப்பது மந்திர மன்னிய நாத மறப்பெற யோகிக் கறநெறி யாமே. (ப. இ.) விந்துவாகிய தூமாயையினின்று தோன்றும் அகரமும் அதனுடன் பொருந்தும் சகாரமும் (அச: அசபை) மெய்ப்பொருள் நினைந்து ஓதலும்; மறிப்பது...யாமே - மீண்டும் மீண்டும் இடையறாது அவ் வொலியை மறப்பின்றி நினையின் அகத்தவத்தோர்க்கு அறமுறையாகும். (8)
|