34
 

இவை ஒவ்வொருவர்க்கும் செவ்விதிற் புலனாதல் வேண்டும்.

(6)

81. சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடையம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.1

(ப. இ.) உலகியல் ஒழுக்கவுண்மையும், அருளியல் ஆய்வாம் இறை, உயிர், தளை என்னும் முப்பொருள் உண்மையும் சத்தியம் எனப்படும். அத்தகைய சத்தியமின்றி, ஒப்பில்லாத சிவபெருமானே முழுமுதல் என்னும் தனி ஞானமாகிய திருவடி உணர்வின்றி, மனம் போனவாறே பொறிகளில் சென்று புலன்களை நுகர்வதாகிய வேட்கையினை விட்டுத் திருவடியினை யுணரும் உணர்வின்றி, இவற்றான் ஆருயிர்க்கொழுநனாம் சிவபெருமான் மாட்டு விளையும் அழியாக் காதலாம் பத்தியுமின்றி, மிக எளியவரும் நம்பியொழுகும் கடவுள் உண்மைக் கோளுமின்றி, ஐம்புலன் நுகர்விலே மருள் கொண்டு இருளுக்கு அடிமையாய், மெய்ப்பொருளை நாடாது திரியும் மூடர்கள் எங்ஙனம் பிராமணர்கள் ஆவார்கள்? ஒரு காலத்தும் பிராமணர் ஆகார்.

(அ. சி.) பிராமணர் - பிரமனை வணங்குகிறவர்கள். (விஷ்ணுவை வணங்குவோர் வைணவர்; உருத்திரனை வணங்குவோர் உருத்திர பல்கணத்தார்; மகேசனை வணங்குவோர் மாகேசுரர்.)

(7)

82. திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்2
குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணுந்
துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே.

(ப. இ.) ஆருயிர் சுட்டுணர்வோடும் சிற்றுணர்வோடும் கூடியுணர்வதாகிய சித்தும், இருள் மலத்துடன் கிடந்து ஏதும் அறியாததாகிய அசித்தும் முற்றுணர்வாகிய திருவடியுணர்வைச் சார்ந்த இடத்து இலவாயொழியும். அப் பேற்றினைக் கைவரச் செய்வது திருநெறியாகும். அதுவே குருநெறியென்றும் சொல்லப்படும். இந் நெறியாலே சிவகுருவின் திருவடியினைச் சேர்ந்து நாட்கடன் வழிபாடு முதலிய படிமுறைப் பயிற்சிகளெல்லாம் நிட்டையாகிய சமாதியின்கண் ஏற்படும் நாலாம் நிலையாம் பேருறக்கத்தின்கண் (துரியநிலை) தாமே பகல் விளக்குப்போல் அடங்கிவிடும். அந்நிலைக்கண் சிவவுணர்வாகவே இருப்பர். அத்தகையோரே தூய சிவமறையோராவர்.

(அ. சி.) திருநெறி - வேதத் திருநெறி, வேதமார்க்கம். குருநெறி சன்மார்க்கம்.

(8)


1. சாவமுன். 8. திருச்சதகம் 1. மெய்யுணர்தல், 4

" படுபொருள், காஞ்சி. தக்கீசப் படலம், 22.

2. அறியாமை. சிவஞானசித்தியார், 8 - 2 - 20.