356
 

853. சசியுதிக் கும்அள வுந்துயி லின்றிச்
சசியுதித் தானேல் தனதூண் அருந்திச்
சசிசரிக் கின்றள வுந்துயி லாமற்
சசிசரிப் 1பின்கட் டன்றுயில் கொண்டதே.

(ப. இ.) புருவநடுவில் தோன்றும் மதியமிழ்தம் புலனாகும் வரை உயிர்ப்புப்பயிற்சியை விடாது பயின்று,அம் மதியமிழ்தம் புலனாயதும் அம் மதியமிழ்தினைத் துய்த்து, அம் மதியமிழ்து உடம்பின்கண் எல்லா இடங்களிலும் பரவும் வரையில் பயிற்சிவிடாது செய்க. அம் மதியமிழ்து எங்கணும் பரவியபின் புறநாட்டம் அறவே நீங்கிற்றாகும். சசி - மதி. உதித்தல் - (உணர்வில்) புலனாதல். துயிலின்றி - மடியில்லாமல்; முயற்சியுடன் தனதூண் - தன் நெற்றிக்கண் காணப்படும் மதியமிழ்து. துயிலாமல் - புறநாட்டமில்லாமல்; அகநாட்டத்துடன். சரிப்பின் - பரவினால். துயில்கொள்ளுதல் - புறநாட்டம் முற்றாக நீங்குதல்.

(23)

854. ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்
நாழிகை யாக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழவல் லார்இச் சசிவன்ன ராமே2

(ப. இ.) ஊழாகிய உடம்பின் கால அளவையைப் பொருந்தாமல் இருக்கின்றவர் அகத்தவத்தோராவர். அகத்தவம் - யோகம். கால அளவையைப் பொருந்தாமையாவது: அகத்தவம் இல்லாதார்க்குக் காலம் கணக்கிடுவது நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு என ஞாயிற்றைக் கருவியாகக் கொண்டு அளப்பது. அகத்தவத்தோர்க்கு உயிர்ப்பை - பிராணவாயுவைக் கருவியாகக் கொண்டு அளப்பது. ஒவ்வொருநாளும் நாம் விட்டுவாங்கும் மூச்சு வாங்குவதைவிட விடுவதே அளவிறப்ப ஆகின்றது. அதனால் வரவுக்கு மிகுதியாகச் செலவு செய்யும் ஒருவரைப்போல் விரைவில் காலத்தை அளக்கும் காலன் - கூற்றுவன் முன் சென்று விடுகின்றோம். அகத்தவமுடையோர் உயிர்ப்புப் பயிற்சியால் மூச்சை அளவாக விட்டுக் கூடுதலாக உள்ளே தங்கவைத்துக் கொள்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மூச்சை வெளியில் ஒரு சிறிதும் விடாமல் உள்ளேயே அடக்கிவைத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்கள் காலம் அளவின்றி நீள்கின்றது. சுருங்கச் சொன்னால் அவர்கள் தாமாகவே வேண்டும்போது தம் ஆவியை நீத்துக்கொள்வர். அதனால் அவர்கள் தங்கள் பயிற்சியாகிய நாழியால் நமனை அளக்கின்றனர். நமனை அளப்பதாவது சிவனை இடையறாது எண்ணும் எங்கள் பால் ஏ நமனே! உனக்கு வேலையில்லை என்பதே: மேலும் பலவூழிகள் மாளாது அவ்வவ்வூழிக் காலங்களில் தூய பரவெளியில் திளைத்திருந்து மீண்டும் அவ்வுடம்புடனே தோன்றுவர். அதனால் அவர்கள் ஊழிமுதல்வரும் ஆகின்றனர். இம் முதன்மை அவர்கட்குச் சிவனருளால் கிடைக்கப்பெற்றதாகும். இவ் வுண்மை 'யோகியாயிருந்


(பாடம்) 1. பின்கட்டன் கண்டுயில்.

2. தோற்றஞ்சால். நாலடியார், 7.

" மண்ணிற், நாலு. 12. பெருமிழலைக் குறும்பர் 6 - 10.