553
 

நோன்பினர் செறிவினர் ஆகிய இருவரும் கட்புலனாம் திருவுருவப் பற்றுக்கோடுடன் புரிவர். அறிவினர் உணர்வில் திகழும் பற்றுக் கோடில்லாத அறிவுருவிற்றொழுவர். பற்றுக்கோடு - சாதாரம். பற்றுக்கோடின்மை - நிராதாரம். சிவபூசையே உடையவர்பூசை.

(அ. சி.) கிரியையாளரும் யோகிகளும் செய்வது உருவப் பூசையாகும்; ஞானபூசை என்பது அருவப் பூசையாகும்.

(5)

1422. சரியாதி நான்குந் தருஞான நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்த மாறும்
பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து
மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே.1

(ப. இ.) சீலம் நோன்பு செறிவு அறிவு என்னும் நன்நெறி நான்கினும் தனித்தனி முடிந்த முடிபாகக் கொள்ளப்படும் அறிவு நிலையாகிய ஞானம் நான்கு வேதாந்த நெறி ஆறு. அவை கபாலம், காணாதம், பாதஞ்சலம், அச்சபாதம், வியாசம், சைமினியம் என்பன. இவையாறும் புறச்சமயமாகும். சித்தாந்தநெறி ஆறு. அவை வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம் என்பன. இவை யாறும் அகப்புறச் சமயமாகும். சிவவுலகத்தில் நின்று நந்தியங்கடவுள், குன்றாவருளால் குருவுருவாய்த் தோன்றி அறியாமை வயப்பட்டுழலும் மாந்தர்க்கு மெய்ப்பொருளுணர்வு தோன்றுமாறு சீலமுதலிய நன்னெறி நான்கினையும் அருள்புரிந்து முழுமுதற்சிவனை வழிபடுமாறு அமைத்தனன்.

(அ. சி.) ஞான நான்கு சரியையின் ஞானம், கிரியையின் ஞானம், யோகத்தின் ஞானம், ஞானத்தின் ஞானம். வேதாந்தம் ஆறு காபிலம், காணாதம், பதஞ்சலம், அட்சபாதம், வியாசம், ஜைமீனியம் - 6 சித்தாந்தம் ஆறு - பைரவம் வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம். பொன்னகர் - சிவலோகம். மருள் - அஞ்ஞானம்.

(6)

1423. சமையம் மலசுத்தித் தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் அரன்மந் திரசுத்தி
சமைய நிருவாணங் கலாசுத்தி யாகும்
அமைமன்னு ஞானமார்க் கம்அபி டேகமே.

(ப. இ.) செந்நெறிக்கண் திருமுறை வழியாகச் செய்யப்படும் சிவதீக்கை மூவகைப்படும். அவை சமயம் விசேடம் நிருவாணம் என்ப. சமயதீக்கை என்பது நன்னெறிக்குத் தடையாகிய தீமைகள் பலவற்றின் உண்மையினை யுணர்த்தி அவற்றினைத் தூய்மைப்படுத்தலும் சிவ பெருமானருளின் துணையின்றி எவர்க்கும் யாண்டும் எச்செயலும் இல்லை என்னும் உண்மையுணர்ந்து தற்செயலறுதலுமாம். விசேடதீக்கையாவது 'நந்தி நாமமாகிய' திருவைந்தெழுத்தை இடையறாது கணிப்பதால் எல்லாவகையான அகம்புறத் தூய்மைகள் எய்துவனவாகும்.


1. போதமிகுத். சிவஞானசித்தியார், நூல்.

" தேவர்பிரான். சிவப்பிரகாசம், சந்தானம், 5.