684
 

(ப. இ.) எந்தையாகிய சிவபெருமானும் என் அம்மையாகிய பெருமாட்டியும் மணியொளிபோலப் பிரிப்பின்றிக் கலந்து கூடிய கூட்டமும் முற்படக் கூறி முறை இயம்பின் திருவடியுணர்வாகிய சிவ ஞானமாகும். இருவரும் கூடியிருந்த நிலைக்களம் கொப்பூழாகிய சுவா திட்டானமாகும். அதற்கு மேலெனப்படும் நெஞ்சமாகிய அநாகதத்தின்கண் பெருங்கண்ணியை உடன்வைத்து மாறிலாத உவப்புடையவனானான்.

(அ. சி.) கூட்டம் - ஒரு பாகத்தமர்ந்த சேர்க்கை. ஞானமாம் சந்தித்திருந்த இடம் - ஞானம் உண்டாகும் இடம். பெருங்கண்ணி - குண்டலினி. உந்தியின்மேல் வைத்து - மணிபூரகத்தில மனத்தைப் பதித்து (Solar plexues).

(8)

1741. சத்தி சிவன்றன் விளையாட்டுத்1 தாரணி
சத்தி சிவமுமாஞ் சிவன்சத் தியுமாகுஞ்2
சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லை
சத்திதான் உன்றுஞ் சமைந்துரு வாகுமே.

(ப. இ.) உலகுடல்களாகிய மாயாகாரியப் பொருள்கள் சிவன் சத்தியொடு பொருந்தச் சத்தியின் எண்ணத்தால் எளிதாகத் தோன்றிக் காரியப்படுகின்றன. அதனால் அவ் வருட்செயலை விளையாட்டென்பர். இளைப்பில் செய்கை யாண்டும் விளையாட்டென்பதே. ஈண்டு விளையாட்டு என்பதற்குப் பொருள். சத்தி சிவமாகும் சிவம் சத்தியுமாகும். இவ்விரண்டும் பொருளான் ஒன்றே. அகங்கை புறங்கை போன்று இயல்பால் இருநிலை என்ப சத்தியும் சிவமும் இல்லாமல் எப்பொருளும் தோற்றமுறாது. சத்தியே யாண்டும் எல்லாப் பொருள்கட்கும் தாங்கும் நிலைக்களம். அதனால் சத்தியே உலகமாகச் சமைந்தது என ஏற்றிக்கூறுவர். ஏற்றுரை - புனைவு; உபசாரம்.

(அ. சி.) தாரணி - அண்டங்கள் எல்லாமும், அவைகளில் உள்ள இயங்கியற்பொருள்கள் எல்லாமும். தாபரம் - தாபர இலிங்கம் என்கிற ஞானலிங்கம். சத்தி.....ஆகுமே-சிவத்துடன் சத்தி சேர்ந்துதான் உருவ உலகமாகும்.

(9)


1. சொன்னவித். சிவஞானசித்தியார், 1. 2 - 8.

" ஆர்த்த. 8. திருவெம்பாவை, 12.

2. சத்திதா. சிவஞானசித்தியார், 2. 4 - 4.