799
 

2018. வரும்வழி போம்வழி மாயா வழியைக்
கருவழி கண்டவர் காணா வழியைப்
பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக்
குருவழி யேசென்று கூடலு மாமே.

(ப. இ.) வினைக்கீடாக வரும்வழியாம் பிறப்பும் போம்வழியாம் இறப்பும் எஞ்ஞான்றும் மாறா மறையா மாயா அழியா வழியாக நிற்கும். இவ் வழியினைப் பிறக்கும் கருவழி கண்டவர் காண்பர். இவ் வழியினைக் காணாதவர் அருளால் காணும் வழி பெருவழி. அவ் வழி நந்தி முதல்வரால் நவின்று நாட்டியருளப்பட்ட நல்வழியாகும். அதுவே நன்னெறி; திருநெறி. அதனைச் சிவகுருவின் திருவருள்வழியே சென்று பொருள் பெறப்பெறுவதாகும்.

(அ. சி.) கருவழி - பிறக்கும் வழி. கருவழி கண்டவர் காணாவழி, பெரும்வழி, நந்தி பேசும்வழி - முத்திநெறி, சன்மார்க்கம்.

(8)

2019. குருவென் பவனே வேதாக மங்கூறும்
பரவின்ப னாகிச் சிவயோகம் பாவித்து
ஒருசிந்தை யின்றி உயர்பாச நீக்கி
வருநல் குரவன்பால் வைக்கலு மாமே.

(ப. இ.) சிவகுரு என்று அழைக்கப்படுபவன் செந்தமிழ் மறை முறையாம் வேதாகமம் சிறந்தெடுத்தோதும் பேரின்ப வடிவினன். அவ் வடிவுடையவனாகிச் செவ்வி யுயிரினுக்குச் சிவயோகம் சேர்ப்பித் தருள்வன். அவ் வுயிர் திருவடியுணர்வு கைவந்தமையால் வேறோர் எண்ணமும் எண்ணுவதில்லை. அவ் வுயிரை அந்நிலையான் உயரச் செய்து பாசப்பசை யகற்றித் திருவடிநீழற்கீழ் வருவித்துப் பேற்றின்கண் நிலைப்பிப்பவன் சிவகுருவாவன்.

(அ. சி.) பரஇன்பன் - பேரின்ப வடிவினன். உயர் - கிளைத்து எழும்.

(9)

2020. சத்தும் அசத்துஞ் சதசத்துந் 1தான்காட்டிச்
சித்தும் அசித்துஞ் சிவபரத் தேசேர்த்துச்
சுத்த மசுத்த மறச்சுக மானசொல்
அத்தன் அருட்குரு வாமவன் கூறிலே.

(ப. இ.) என்றும் ஒருபடித்தாய் இயற்கை உண்மை அறிவு இன்ப மெய்ப்பொருளாய் விளங்குவது சிவம். அது சத்தென்று செம்பொருட்டுணிவினரால் ஓதப்படும். காரணகாரியத் தொடர்ச்சியாய்த், தோற்றவொடுக்கம் உடையதாய், அழிவில்லதாய், ஆற்றல் உள்ளதாய், அறிவில்லதாய் இயற்கை உண்மையாய் இருப்பது மலம். அஃது அசத்தென்று ஓதப்படும். சத்து - நிலையுள்ளது. அசத்து - நிலையில்லாதது. மெய் பொய் என்பனவற்றிற்கும் இவையே பொருள். மலம் மூவகைப் படும். அவை ஆணவம் கன்மம் மாயை என்று சொல்லப்படும். செம்


1. சத்தசத். சிவஞானசித்தியார், 7. 3 - 1.

" யாவையும். சிவஞானபோதம், 7.