414
 

பேரொளியினை ஓமகுண்டத்து அவியாது காத்து அதன் வழியாகச் சிவபெருமானை எண்ணியிருந்தவர் மெய்யுணர்வு பழுத்து உடல்கெடாது கோடிக்கணக்கான ஊழிகள் கண்டு வாழ்வர். ஆத்தம் - துணை. மூத்து - பழுத்து. உகம் - ஊழி.

(அ. சி.) ஆத்தமதாக - உபகாரம் உள்ளதாக. காத்து - நவகுண்ட அக்கினியைக் காப்பாற்றி, பூசித்து.

(28)

1019 .உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும்
பயங்கண்டு கொண்டஇப் பாய்கரு வொப்பச்
சகங்கண்டு கொண்டது சாதன மாமே.1

(ப. இ.) தொன்மை தொட்டுப் போற்றிவருகின்ற ஒன்பது திருவருள் ஆற்றலைக் குறிக்கும் ஒன்பது (346) ஓமகுண்டமும் அகத்தவத்தாராகிய யோகிகள் அகத்தே வளர்த்துப் பயிலுவர். கருவுக்கு அஞ்சி வாழும் அவர்களின் பிறப்பு நீங்குவது ஒப்ப இவ்வுலகப் பிணிப்பும் நீங்கும். அங்ஙனம் நீங்க இவ் வோமப் பயிற்சி துணையாகும்.

(அ. சி.) உகங் கண்ட - பழமையான

(29)

1020 .சாதனை நாலு தழல்மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளையாறு பூநிலை
போதனை போதைஞ்சு பொற்கய வாரண
நாதனை நாடு நவகோடி தானே.2

(ப. இ.) செந்நெறிச் செல்வர்கள் பயிலும் நிலை சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நான்காகும். ஞாயிறு, திங்கள், தீ என்னும் தழல் வண்ணன் முக்கண்ணையும் குறிக்கும் தழல் மூன்று. இம் மூன்றன் அடையாளம் முறையே வட்டம், பிறை, முக்கோணம் என்ப. அத்தழல் அழகிய வட்டக் குண்டத்தின்கண் நாற்புறமும் வீசும் ஒளித்தன்மை வாய்ந்தது. மேலும் அகத்தே விளையும் ஆறு நிலைக்களத்தைக் கொண்டது. மெய்யுணர்வுப் போதனையுமாகும். ஐம்பூதங்களுக்குச் சொல்லப்படும் ஐந்து பொழுதுமாகும். பொன்வண்ணமான பெரிய ஐராவணமென்னும் யானைக்குரிய முதல்வன் சிவபெருமான் அவனை நாடுமவர் பல வூழிகள் பயன்பெற்றுய்வர். சாதனை - பயில்வு. வேதன் - ஈண்டு நான்கு என்னும் எண்ணில் வந்தது. ஐ - அழகு. கயவாரணம் யானை எனக்கொண்டு அதன் முகம்போன்ற மூத்த பிள்ளையார் என்றலும் ஒன்று. ஐராவணம் ஈராயிரம் கொம்புகளையுடைய வெள்ளை யானை. இது சிவபெருமானுக்குரியது. பொன் வண்ணம் - சிறந்த வண்ணம்.

(அ. சி.) தழன்மூன்று - கொடிநிலை, கந்தழி, வள்ளி. ஆறு பூநிலை - ஆறு ஆதாரங்கள். போதஞ்சு பொற்கயம் - ஐம்பூதங்கள். வாரண நாதன் - விநாயகன்.

(30)


1. நல்லார். திருமந்திரம். 346.

2. உயிரா. அப்பா, 6. 25 -1.