பொருள்கள் பாசம். அதற்கு மூலம் ஆணவவல்லிருள் எனவுணர்ந்து அவற்றைத் துரந்து ஆணவத்தால் விளையும் மதமற்று யான் எனதென்னும் செருக்கற்று இவையனைத்தையும் அருள் நினைவால் மாற்றிவிடுதல் அமையும். அங்ஙனம் மாற்றிவிட்டவர் திருவடிக்கீழ் நிலைபெற்ற குடியினராவர். இவரே திருவருளால் சிவத்தை உணர்வில் உணர்ந்த ஒண்மையராவர். இவரே சிவசித்தர். (அ. சி.) பதமுத்தி மூன்றும் - சத்தியலோகம், வைகுந்தம், கயிலாயம். இதமுற்ற - ஞான இன்பத்துக்குப் பொருளாகப் பொருந்திய திதமுற்றவர்கள் - நிலைத்திருப்பவர்கள். (14) 2486. சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன் சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர் முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச் சத்தர் சதாசிவத் தன்மையர் 1தாமன்றே. (ப. இ.) செந்தமிழ்சேர் முந்திய சித்தராவார் சிவபெருமானை அருளால் உணர்விற் கண்டுணர்ந்த ஒண்மையர். அவன் திருவடி நினைவை விட்டு அகலாத சீரினர். தூமாயை தூவாமாயைகளுடன் தோய்ந்திருப்பினும் தாமரையிலைநீர்போல் ஒட்டுப்பற்றின்றி ஒருவனையே எண்ணும் மட்டில் அருள்சேர் திருவினர். திருவடிப்பேற்றினர். ஏனையாரைத் திருவடிப்பேற்றிற்கு ஆளாக்கும் நம்மூலரும் நால்வரும் (2502) போன்ற வாயிலினர். மூலமாகிய குண்டலிக்கண்ணும் அகத்தவத்தால் ஐந்தெழுத்தால் ஓமஞ்செய்யும் தூயர். இவர் அருளோனாகிய சதாசிவத்தன்மையராவர். (அ. சி.) சித்தர் - சிவத்தைக் கண்டவர். மூலத்துச் சத்தி - குண்டலினி. (15)
21. எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை 2487. உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனுந் துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு மதிக்குங் குபேரன் வடதிசை யீசன் நிதித்தெண் டிசையு நிறைந்துநின் 2றாரே. (ப. இ.) புறத்து அமைப்பதுபோல் அகத்து நெஞ்சத் தாமரையின் கண்ணும் எண்புலக் காவலர் அமைக்குமாறு ஓதியருளுகின்றனர். நெஞ்சத் தாமரை இதழை எட்டாக அமைத்தல்வேண்டும். அதன்கண் கீழ்புலத்துத் தோன்றிவரும் ஞாயிறும், தென்கீழ்புலத்துத் தீக்கடவுளும், தென்புலத்து ஞமனும், தென்மேல்புலத்து நிருதியும், மேல் புலத்து மழைக் கடவுளும், வடமேற்புலத்துக் காற்றுக் கடவுளும்,
1. அஞ்செழுத்தா. சிவஞானபோதம், 9. 3 - 1. " காமி. அப்பர், 5. 22 - 8. 2. ஞாயிறாய். " 4. 32 - 6.
|