1097
 

(ப. இ.) திருவருளைப் புரியும் அம்மையாகிய வனப்பாற்றலும் அவ்வாற்றலின் துணையும் அத்தனாகிய சிறப்பும் தம்மில் ஒன்றுகூடி ஆருயிர்க்குத் துணைபுரிந்து அவ்வுயிரைப் பேணி ஈன்றவராவர். அதனால் உள்ளுறு மாயை, நடப்பாற்றல், ஆணவம், கன்மம், மாயை ஆக்கம் ஆகிய ஐம்மலங்களும் நீங்கும். நீக்கவே 'சிவயசிவ' என்று ஓவாது கணிக்கும் நற்றவம் கைகூடும். அங்ஙனம் கைகூடவே அருவினையகலும். அவ் வருவினையை அகற்றுவதும் அச் 'சிவயசிவ' என்னும் திருவைந்தெழுத்துத் திருமறையேயாகும்.

(அ. சி.) அருடரு மாயமும் அத்தனும் - அருள்தங்கிய மோகினியும் உருத்திரனும். தம்மில் - தம்முள் கூடி. ஒருவனை - சாத்தனை. அவ்வெழுத்து - அந்தச் சி - வா - ய என்னும் எழுத்துக்கள்.

(7)

2666. சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவுந் தேர்ந்துள் அடங்கச்
சிவசிவ வாய தெளிவினுள் ளார்கள்
சிவசிவ வாகும் திருவரு ளாமே.

(ப. இ.) தெளிவறிவில்லாத எளிய ஊமர்கள் இம்மை உம்மை அம்மை என்னும் மூவிடத்துக்கும் துணையாக என்றும் பொன்றாது நிற்பது "சிவசிவ" என்னும் திருநான்மறைத் திருவைந்தெழுத்தாகும் என்னும் மெய்ம்மையினைத் தெளிகிலர். அத்துணைச் சிறந்த திருவெழுத்து மறையாம் 'சிவசிவ' என்று இடையறாது கணித்தல்வேண்டும். கணிக்கவே, அடங்கா மனமும் ஒடுங்கா உயிர்ப்பும் அடங்கி ஒடுங்கும். ஒடுங்கவே, 'சிவசிவ' என்னும் சிறப்பினை யுணர்ந்த தெளிவினராவர். தெளிவினராகவே 'சிவசிவ' வாக நிலைக்கும் திருவருளைப் பெறுவர். இம்மறை அறிவுநெறியினர் (2550) மேற்கொள்ள வேண்டிய அருமறையாகும்.

(அ. சி.) சிவசிவ வாய - சிவா என்னும் குறில் நெடில் எழுத்துக்களுக்குரிய மாத்திரைப்போது வாயுவை இரேசக பூரக கும்பகம் செய்தல்.

(8)

2667. சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளுஞ்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி 1தானே.

(ப. இ.) முன்பும் திருவருளால் ஒருவாது 'சிவசிவ' என்றோதும் பெருஞ்சூழ்வால் தாமும் ஓதும் வாய்ப்புப் பெறாதார் பலருளராவர். அவர்போல் தீவினையாளர் எவருமிலர். அத் தீவினையாளர் அப் பிழையினையுன்னி இப் பிறப்பிலேனும் 'சிவசிவ' என்று செம்மனத்தால் ஓதுதல்வேண்டும். அத் தீவினையாளர், அங்ஙனம் முன்வந்து ஓதுதல்


1. நானேயோ. 8. திருவேசறவு, 10.

" தொந்தத். 10. திருமுலர், 2451.

" கேடு. அப்பர், 5. 56 - 9.

" வெம்மை " 5. 43 - 8.

" பிணிக்கு. திருக்குறள், 1102.