1230
 

2927. நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்
தவம்வருஞ் சிந்தைக்குத் தானெதி 1ராரே.

(ப. இ.) பிறப்பு இறப்புகட்கு உட்படும் ஆருயிர் சிவனை மறந்தவுயிர். அவ்வுயிர் சிவனை நினைப்பதற்கும் பிறவாமையிற்றிளைப் பதற்குமாக நமன்முன் செல்லும். இவ்வுண்மை வரும் போற்றிப் பஃறொடையடிகளான் உணர்க:

41."வானாடர் கோமுதலாய் வந்த பெரும்பதத்து
நானா விதத்தால் நலம்பெறுநாள் - தான்மாள
வெற்றிக் கடுந்தூதர் வேகத் துடன்வந்து
பற்றித்தம் வெங்குருவின் பாற்காட்ட - இற்றைக்கும்
இல்லையோ பாவி பிறவாமை என்றெடுத்து
நல்லதோர் இன்சொல் நடுவாகச் - சொல்லியிவர்
செய்திக்குத் தக்க செயலுறுத்து வீரென்று
வெய்துற் றுரைக்க விடைகொண்டு. . . . . ."

அத்தகைய நமன்றன் வெந்தூதுவர் சிவனைமறவா நமக்கு உறவாவர். மறந்து வருவரேல் அடியேன் சிவன்றன் மீளாவடிமை என்று தாமே உணருமாறு அவன்றன் அடையாளமாகிய திருவைந்தெழுத்துப் படைக் கலத்தை வெளிப்பட வழுத்துவேன். இதுவே ஞானவாள். 'ஞானவாள் ஏந்துமையர்' என்பதும் இப்பொருட்டு. சிவபெருமான்றன் தூதுவர் வருவராயின் அடியேன் வணங்கி உடன்செல்வது மாறா உறுதியாகும். பிறப்பிற்கு ஏதுவாகிய இருள்சேர் இருவினைகளையும் திருவருளால் பண்டே அறுப்பித்துள்ளேன். 'சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு' என்பது செந்தமிழ் முதுமொழி அத்தகைய சிவத்தைப் பேணும் சிந்தையர்க்கு எதிராவர் யாரே? ஒருவரும் இலர் என்பதாம். 'எதிராமே ' என்னும் பாடத்திற்குத் தவம் வரும் சிந்தையர்க்குச் சிவபெருமான் வெளியாவர் எனக் கூறுக.

(11)

2928. சித்தஞ் சிவமாய் மலமூன்றுஞ் செற்றவர்
சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தங்
கத்துஞ் சிலுகுங் கலகமுங் கைகாணார்
சத்தம் பரவிந்து தானாமென் 2றெண்ணியே.

(ப. இ.) இடையறாது திருவைந்தெழுத்தையே கணிக்கும் நற்றவப் பேற்றால் கணிப்போர் நெஞ்சகம் சிவனிருக்கையாய் சிவவடிவாய்த்


1. ஞமனென்பான். அப்பர், 5. 97 - 18.

" கார்கொள். " " 92. - 3.

" வரையார். " 6. 47 - 3.

" காவிரியின். " " 71 - 2.

2. நிர்க்குணனாய். சிவஞானபோதம், 9. 2 - 1.

" முத்திநெறி. 8. அச்சோப்பதிகம், 1.