பொருள் வயப்பட்டு விடாது அறிவழிந்து குழறுவதாகிய பிதற்றினைச் செய்து பெருமகிழ்வுற்றிருங்கள். நீங்கா நேசமாகுங்கள். அறிவுக்கு அறிவாய் நின்று விளங்கும் சிவபெருமான் நறுமலர் நாற்றம்போல் உயிர்க்குயிராய் நிலைத்து நின்று இன்புறுத்தியருளினன். நிகழ் ஒளி - இயற்கை அறிவு. நேசமாகு என்பது ஆகுமின் என்பதன் கடைக்குறை. அல்லது ஆகு என்பதை முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்றாகக் கொண்டு நீ நேசமாகுவாயாக என முடிக்க. (அ. சி.) வாசமலர்க் கந்தம் - பூவின் மணம் போல. (5) 292. விழுப்பமுங் கேள்வியும் மெய்நின்ற ஞானத் தொழுக்கமுஞ் சிந்தை உணர்கின்ற போது வழுக்கி விடாவிடில் வானவர் கோனும் இழுக்கின்றி எண்ணிலி காலம் தாமே. (ப. இ.) மேலோதியவாறு முப்பொருளுண்மையினைத் திருவைந்தெழுத்தின்கண் வைத்து உணர்ந்தொழுகும் விழுப்பமும் சிறந்தது. நல்லார், அல்லார் கண்டத்தன் அருளால் கூறும் பொருண் மொழிக் கேள்வியும் சிறந்தது. திருவடியுணர்வாம் மெய்ஞ்ஞானத்தொழுக்கமும் சிறந்தது. இவற்றின்கண் எண்ணம் இடையறாது நாடும்போது வழுக்குதலாகிய பொச்சாப்பு ஏற்படாதிருத்தல் வேண்டும். அங்ஙனம் வழுக்காதிருப்பின் தூய விண்ணாகிய சிவவுலகத்துச் சேர்வர். வேந்தனாகிய சிவபெருமான் தவறுதலின்றி அளவில்லாதவூழி உடனாய் நின்று அவ்வுயிரையும் நிலைப்பித்துத் திகழ்ந்தருள்வன். (அ. சி.) வழுக்கிவிடாவிடில் - தவறு இல்லையேல். (6) 293. சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல் செறிவால் அனுபோகஞ் சித்திக்கும் என்னில் குறியாத தொன்றைக்1 குறியாதார் தம்மை அறியா திருந்தார் அவராவர் அன்றே. (ப. இ.) சிறுமகார் சிற்றிலிழைத்துச் சிறு சோறடுவர். உற்ற விருந்துடன் இருமுதுகுரவர்க்கும் ஈவர். தாமும் அருந்தி உண்மையின்பம் எய்தினார்போல் உள்ளம் நிறைவுறுவர். நிறைவுறுதல் - திருத்தியடைதல். திருத்தி - திருப்தி. அதனை உண்மையன்றென உணர்ந்த முதியோரும் அன்றெனக் கூறாது ஆமென்றே கூறுவர். என்னை? அதுவே அப்பருவத்துக்கண் கூறும் ஒப்புரையாகலான் என்க. அதுபோல் ஐம்பொறி நுகர்வால் செம்பொருட் சிவனை இம்பரில் காண்டும் என்றும் அது கைகூடுமென்றும் சிலர் கூறுவர். அங்ஙனம் கூறுவார் அச்சிவனையும் தம்மையும் அறியாதவராவர். அச் சிறுமகாரையும் ஒப்பாராவர். ஆயின், அச் சிவபெருமான் சுட்டுணர்வாலும் சிற்றுணர்வாலும் அறியப்படாதவன். அவ்வுண்மையினைக் குறியாததொன்று எனக்குறித்தனர்
1. உணருரு. சிவஞானபோதம், 4. " சுட்டி " 9. 2 - 2. " உணர்வி. 12. சம்பந்தர், 161.
|