218
 

பேற்றினர் வழிப்பேற்றினர் என இருவகையினராவர். இம்முறையில் குறை செவ்வியுடையார், விழுப்பேற்றினர், வழிப்பேற்றினர் என மூவகைப்படுவர். நிறை செவ்வி - பக்குவம் குறைசெவ்வி - அபக்குவம். விழுப்பேறு - பரமுத்தி. வழிப்பேறு - அபரமுத்தி. ஆண்டான்மெய்க்கண் உறையும் அறிவுக் கடவுளரை வழிபட்டு அவர்நிலை எய்திய முனிவர் ஒரு நூற்றெண்மரும் இவ்விருமலமுடையார் நிலையினராவர். முனிவர் உருத்திரர். (சீகண்ட உருத்திரரும் இந்நிலையினரேயாவர்.) முரண்சேர் ...தாரே - வலிமைமிக்க எல்லாக் கட்டும் உடையார் மும்மலத்தாராவர்.

(4)

479. பெத்தத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது
ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே.

(ப. இ.) முதன்மை மலப்பசை அறிவொடு தங்கிய ஒரு மலமுடையார் விழுமிய முழுமுதற் சிவனேயாவர். சித்தது : அது முதற் பொருள் ஈறு; பகுதிப் பொருள் விகுதி. முதற்பொருள் - பகுதிப்பொருள். ஈறு - விகுதி. ஒத்திட்...சித்துமாய் - இருமலப் பிணிப்பினர் மெய்யுணர்வினராய். குறை செவ்வியுடையராய்; மத்தத்து...மாட்டாதார் - மருளுடையராய் மும்மலத்தை அடக்கும் வலியில்லாராய்; சத்தத்...ளாரே - அருவுடலோடுறைந்து மும்மலக் கட்டுடையாராவர். மத்தத்து - உன்மத்தத்து; மருள் (தலைக்குறை). சத்தம் - ஓசை. இஃது அருவுடலைக் குறிக்கும்.

(5)

480. சிவமாகி ஐவகைத் திண்மலஞ்1 செற்றோர்
அவமாகார் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம்2 நாடிக்கண் டோரே.

(ப. இ.) சித்தர் - இறைவிளங்கும் நிறையுள்ளம் உடையார். முத்தாந்தம் - விழுப்பேறு; சாயுச்சியம். பவம் - பிறப்பு. நவமானதத்துவம் - ஒன்பதாகிய மெய். அவை : அறிவு; (அத்தன்). ஆற்றல் (அன்னை), நுண்ணோசை (நாதம்), நினைவோசை (விந்து), அருளோன், ஆண்டான், அரன், அரி, அயன் என்னும் ஒன்பது மெய்கள். நாடிக்கண்டார் - திருவருட்கண்ணால் ஆய்ந்துணர்ந்தார்.

(அ. சி.) ஐவகைத்திண்மலம் - ஆணவம் - கன்மம் - மாயை - மாயேயம் - திரோதாயி.

(6)

481. விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
விஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம்
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே.


1. முன்புதிருக். 12. கண்ணப்பர், 154.

2. சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார், 2: 4 - 2.