469
 

(ப. இ.) திருவருளம்மையும் அவர் ஆணைவழி இயங்கும் அயன், அரி, அரன் என்னும் கடவுளர் மூவரும், அறுவகை ஓசையும், பதினாறு கலைகளும், தீநெறிச் செலுத்தாது நன்னெறிச் செலுத்தும் புருவநடு ஆணையும், மறைமொழி ஆராய்வும், கொண்டவளாய்ச் சார்ந்தவர் வழிபட்டேத்தும் தன்மையளாய் வீற்றிருந்தனள். குளம் - நெற்றி; புருவநடு.

(44)

1175. சத்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்ப தறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போற் கதறுகின் றாரே.1

(ப. இ.) சத்தியென்று ஓதப்பெறும் பெண்பிள்ளை தோன்றாத் துணையாவள். அவள் ஆருயிர்கள் எல்லாம் நன்னெறி நான்மை பயின்று நாயனடி தலைக்கூடப் பெறுவதற்குத் துணைபுரிவள். அவ்வம்மை வீடுபேறளிக்கும் மேன்மையள். அவள் திருவடியில் சேர்ப்பிக்கும் பேரன்பாகிய பத்தியினைப் பாழாக உகுத்த அறிவிலாதவர் குரைக்கும் நாய் கடியாதென்பதுபோல் பயனின்றி மறைமொழிந்து கதறுகின்றார்கள். இவர்களே 'அசிக்க ஆரியங்கள் ஓதும் ஆதர்கள்' எனத் திருமாளிகைத் தேவரால் அறையப்பட்டோராவர். மேலும் நக்கீர தேவரால் 'ஆரியப் புத்தகப் பேய்கொண்டு புலம்புற்று' எனக் கடியப் பட்டோருமாவர்.

(அ. சி.) சாதக - சாதகர்க்குரிய.

(45)

1176. ஆரே திருவின் திருவடி காண்பர்கள்
நேரேநின் றோதி நினையவல் லார்க்குக்
காரேர் குழலி கமல மலரன்ன
சீரேயுஞ் சேவடி சிந்தைவைத் தாளே.2

(ப. இ.) செந்தமிழ்த் திருமறையும் திருமுறையும் நானெறிப் பயிற்சியில் நின்று ஓதி அம்மையின் திருவடியை நினையவல்லார்க்கு மழை நிகர் கூந்தலையுடைய அவ் அம்மை செந்தாமரையன்ன. சீரும் சிறப்பும் வாய்ந்த தன் சேவடியை நல்கியருள்வன். அத் திருவடியை வைத்தற்குரிய இடம் நினையவல்லாரது உள்ளத் தாமரை. இம் முறையன்றி அத் திருவடியைக் காணுந் தகுதி எவர்கட்கும் இல்லை. திருமறை: நால்வர் தமிழ். திருமுறை: மூலர் தமிழ். இவற்றை முறையே அறநூல் எனவும் பொருள் நூல் எனவும் கூறுதலுமாம். நெறிநூல் துறைநூல் என்றலும் இவையே.

(46)

1177. சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து
முந்தையில் வைத்துத்தம் மூலத்தி லேவைத்து
நிந்தையில் வையா நினைவதி லேவைத்துச்
சந்தையில் வைத்துச் சமாதிசெய் வீரே.


1. திசைக்குமிக். 9. திருமாளிகைத் தேவர், 4. கோயில் - 5.

" மந்திர. சம்பந்தர், 3. 22 - 2.

" தவறு - 11. நக்கீரர், கோபப்பிரசாதம்.

2. தேவர். நல்வழி, 40.