609
 

குறித்தோர் சிவனுமாய்ச் சிறப்பருள் தலைவனுமாய் நிற்பவராவர். அவரையே சிவகுருவென்பர். அச் சிவகுருவே நூலாலும் நூலாலுணரும் நோன்மை யறிவாலும் அறியவொண்ணாத சிவன் என்பர். நூலுணர்வு - சுட்டுணர்வு. நோன்மையுணர்வு - சிற்றுணர்வு. நுண்ணுணர்வு - முற்றுணர்வு. அருள்வீழ்ச்சி - சத்திநிபாதம்.

(9)

1557. சித்தம் யாவையுஞ் சிந்தித் திருந்திடும்
அத்தன் உணர்த்துவ தாகும் அருளாலே
சித்தம் யாவையுந் திண்சிவ மானக்கால்1
அத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே.

(ப. இ.) அத்தனாகிய சிவபெருமான் தன் திருவருளால் ஆவிகளுக்கு உண்ணின்று உணர்த்தியருள்வன். அதனால் எண்ணமாகிய சித்தம் யாவற்றையும் உள்ளவாறு உணர்ந்திருந்திடும். அம் முறையில் எண்ணமானது இடையறாது சிவத்தையே நாடுதலால் எண்ண முதலிய கருவிகளனைத்தும் சிவக்கருவியாகச் சிறக்கும். அத்தனாகிய சிவபெருமானும் அவ் ஆவி தானாகவே அமர்ந்திடுவன். எண்ணம் - சித்தம்.

(அ. சி.) சித்த..ஆனக்கால் - பசுகரணம் எல்லாம் பதிகரணம் ஆனக்கால்.

(10)

1558. தானந்தி சீர்மையுட் சந்தித்த சீர்வைத்த
கோனந்தி யெந்தை குறிப்பறி வாரில்லை
வானந்தி யென்று மகிழும் ஒருவற்குத்
தானந்தி யங்கித் தனிச்சுட ராமே.

(ப. இ.) தானே, சிவபெருமானென விளங்கும் நந்தியெங் கடவுள் வகுத்தருளிய சீலம் நோன்பு செறிவு அறிவு என்னும் இறவாத் தவமாம் நானெறியுள், அறிவு நெறியாகிய நன்நெறியின்கண் காணப்படுவதான திருவருள் முறைமையினை நல்கியருளியவன் நந்தியாகிய சிவபெருமான். அவனுடைய திருவருட் குறிப்பினை அறிவாரில்லை. அவனருளால் அறிவார்க்கு அவன் மேலாகிய சிவன் எனக் காணப்படுவன். அவ்வுண்மையினைக் கண்டு ஆவிகள் பெருமகிழ்வு கொள்ளும். அச் சிவனே மாலைக்காலத்து விளங்கும் அருட்சுடார்த் திருவிளக்காகவும் தோன்றியருள்வன்.

(அ. சி.) சீர்மையுள் - சன்மார்க்க ஒழுககத்துள். சந்தித்த - காணப்படுவதான. வானந்தி - மேலான நந்தி. அந்தி அங்கி - மாலைக்காலத்துத் தீபம் போன்றவன்.

(11)

1559. திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளா தருளும் மயக்கறும் வாய்மைப்
பொருளாய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் அருளா விடிலோர ஒண்ணாதே.2


1. இந்நிலை. சிவஞானசித்தியார், 8. 2 - 24.

2. ஆரண. " 1. 2 - 18.